Liz Mathew
Will Nitish remain Bihar CM? No doubt says BJP; but voices within talk of his reduced clout : செவ்வாய் கிழமை மாலையில் என்.டி.ஏ கூட்டணி, பீகாரில் வெற்றி பெறுவதற்கான 122 தொகுதிகளையும் தாண்டி வெற்றியை உறுதி செய்தது. இந்த கூட்டணியில் முதன்முறையாக பாஜக பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று பீகாரில் வரலாறு படைத்திருக்கிறது. ஆனாலும் இக்கட்சியின் தலைவர்கள் பலரும் நிதீஷ் குமார் முதல்வராக பதவியை தொடர்வார் என்பதை உறுதி செய்துள்ளனர்.
இந்த கூட்டணி கட்சியின் வடிவமைப்பாளர், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நிதீஷ் குமாருக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்தார். கட்சி தலைவர்கள் அனைவரும் அது வாழ்த்துக்கான அழைப்பு என்று கூறியுள்ளனர். என்.டி.ஏ ஆட்சியை தக்க வைத்தால் நிதீஷ் தான் முதல்வராக பொறுப்பேற்பார் என்று அமித் ஷா கூறியதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் நிதீஷ் குமாரும் அவரின் ஜே.டி.யூ கட்சியும் வாக்கு அறிவிப்பின் இறுதி கட்டத்தின் போது வீழ்ச்சியை சந்தித்துள்ளனர். பாஜக போட்டியிட்ட 110 தொகுதிகளில் 74 தொகுதிகளிலும் ஜனதா தளம் போட்டியிட்ட 115 தொகுதிகளில் 43 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. 21 தொகுதிகளை புதிதாக கைப்பற்றியுள்ளது பாஜக. ஆனால் ஏற்கனவே கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற தொகுதிகளில் 28 தொகுதிகளை இழந்துள்ளது ஜே.டி.யூ
இந்த கூட்டணி உறுதி ஆன போதே அப்போதைய பாஜக தேசிய தலைவராக இருந்த உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதீஷ் குமார் தான் முதல்வராக பொறுப்பேற்பார் என்று உறுதியாக கூறிவிட்டார். அந்த நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம் என்று கூறியுள்ளார் பீகார் பாஜக தலைவர் சஞ்சய் ஜெய்ஸ்வால். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கும் நிதீஷ் குமார் தான் முதல்வராக பதவி வகிப்பாராக என்று கேட்ட போது, பிரதமர் அப்படி தான் கூறியுள்ளார் என்றால் அது அப்படித்தான் இருக்கும் என்று சஞ்சய் கூறியுள்ளார்.
ஆனாலும் கூட்டத்தில் குழப்பம் நிலவிய வண்ணமே உள்ளது. நிதீஷ் குமாருக்கு எதிராக மக்கள் மத்தியில் கோபம் இருப்பதை பிரச்சாரத்தின் போது காண நேர்ந்தது. ஆனால் அது எதிர்கட்சியினருக்கு வாக்குகளாக சேகராமகவில்லை. ஆனாலும் இதனை அப்படியே புறந்தள்ளிவிட இயலாது.
பாஜக தலைவர் ஒருவர், நிதீஷ் குமார் முதல்வராகலாம் என்று மக்கள் மத்தியில் கூறப்பட்டது ஒரு ஆப்சன். ஆனால் வருங்காலத்தில் இருக்கும் வாய்ப்புகள் இன்னும் திறந்த நிலையில் தான் உள்ளது. இந்த முடிவை 6 மாதம் கழித்தோ அல்லது ஒரு வருடம் கழித்தோ மறுபரீசிலனை செய்யலாம் என்றும் அவர் கூறினார். மற்றோரு கட்சி தலைவர், எங்கள் பக்கத்தில் எந்த குழப்பமும் இல்லை. தேர்தல் முடிவுகளுக்கு பிறகு நிதீஷின் நிலைப்பாடு எப்படி இருக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என்று கூறியுள்ளார்.
மற்றொரு தலைவரான சஞ்சய் பஸ்வான் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசிய போது, மறுபரீசிலனைக்கு இன்னும் வாய்ப்புகள் உள்ளது. இது பாஜகவிற்கான வெற்றி, மோடிக்கான வெற்றி. நாங்கள் எங்களின் வாக்குறுதிகளில் உறுதியாக இருப்பதால் நாங்கள் நிதீஷ் குமாரையே முதல்வராக முன்னிறுத்துகின்றோம். இந்த பதவியை வகிப்பதும் விட்டுக் கொடுப்பதும் அவர் முடிவு என்று கூறியுள்ளார்.
பாஜகவின் அதிக இடங்களில் வெற்றி என்பது கேபினட் மற்றும் முக்கியமான துறைகளிலும் அவர்கள் தான் அமைச்சர்களாக இருப்பார்கள் என்பதை உறுதி செய்கிறது. கேபினட் மற்றும் அரசு அமைப்பது, கூட்டணியில் இருக்கும் கட்சிகளின் வெற்றி பெற்ற இடங்களைப் பொறுத்தது என்று ஒருவரும், பரஸ்பர ஒப்பந்தத்தின் அடிப்படையில் அமைய வேண்டும் என்று மற்றொரு தலைவரும் கூறியுள்ளனர்.
தற்போதைய ஆட்சி இரண்டு ஆண்டுகள் ஆர்.ஜே.டியுடன் வைத்திருந்த கூட்டணியில் இருந்து வெளியேறி பாஜகவுடன் மீண்டும் இணைந்து நடத்தப்பட்டு வருகிறது. தற்போதையை ஆட்சியில் 17 அமைச்சர்கள் ஜனதா தளம் கட்சியை சேர்ந்தவர்கள். துணை முதல்வர் சுஷில் குமார் மோடி உட்பட பாஜக 12 அமைச்சர்களை கொண்டுள்ளது. நம்பிக்கைக்குரிய கூட்டணி கட்சியாக பாஜக இருந்ததில்லை என்ற விமர்சனத்தில் இருந்து வெளியேற இம்முறை பாஜக உறுதியாக இருப்பதால் நிதீஷ் முதல்வராக நீடிக்க வாய்ப்புகள் உள்ளது.
இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க
பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி கட்சியின் நிலைத்தன்மை தொடர்பாக பல்வேறு குரல்கள் ஆங்காங்கே எழுந்து வருகிறது. ஐக்கிய ஜனதாதளம் கட்சியுடன் இணைந்து இந்த தேர்தலில் போட்டியிடும் முடிவை எடுத்தபோது அதன் திட்டங்களில் மிகவும் தெளிவாக இருந்தது. டபுள் எஞ்சின் என்ற தேர்தல் திட்டத்தை முன் நிறுத்துவது. அதே நேரத்தில் மிகப்பெரிய கட்சியாக இருக்கும் ஜே.டி.யுவின் அளவை குறைப்பது. இவையாவும் சிராக் பஸ்வானின் எல்.ஜே.பி கட்சிக்கு பின்னால் நடைபெற்றது. அவரிடம் இருந்த பெரிய தலைவர்கள் பலரும் விலகிக் கொண்டாலும் சொல்லப்பட வேண்டிய செய்தி சென்று சேர்ந்தது.
எல்.ஜே.பி. இந்த முறை குறைவான தொகுதிகளிலேயே வென்றிருக்கலாம். இருப்பினும் ஜே.டி.யுவின் புகழைக் குறைக்க இந்த கட்சியின் பங்கு எத்தகையது என்பதை என்.டி.ஏ ஏற்கனவே நன்றாக அறிந்திருந்தது. பாஜக வேட்பாளர் 1000-2000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுள்ள சில தொகுதிகளில், பாஸ்வானின் வாக்குகள் வித்தியாசத்தை ஏற்படுத்தியிருக்கும் என்று பாஜக பொது செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியா கூறியுள்ளார்.
மேலும் படிக்க : பீகார் தேர்தல்: சரிவில் இருந்து மீண்ட இடதுசாரிகள்
ஜே.டி.யுவில் உறுதியான இரண்டாவது தலைவர் யாரும் இல்லாததால் அதன் உறுப்பினர்கள் பலரும் பாஜகவை வந்தடையலாம் என்பதாலும், நிதீஷின் புகழ் குறைந்து கொண்டே இருப்பதால் ஜே.டி.யு உடையலாம் என்றும் பாஜகவின் ஒரு பகுதியினர் நினைத்து வருகின்றனர். பிராந்திய கூட்டணிகளில் பலமான கட்சிகளை பலவீனமாக்குவதை தேசிய கட்சிகள் ஒரு யுக்தியாக மேற்கொண்டு வருகின்றனர். இதையே பாஜக மகாராஷ்ட்ரா மற்றும் பஞ்சாபில் முயற்சி செய்து, இறுதியில் சிவசேனா மற்றும் அகலி தளம் கட்சிகளை கூட்டணியில் இருந்து வெளியேற வற்புறுத்தியது. மேற்கு வங்கம், அசாம், தமிழ்நாடு மற்றும் கேரளாவில் நடைபெறும் முக்கியமான சட்டமன்றத் தேர்தல்களுக்கு முன்னதாக, பா.ஜ.க, ஜே.டி.யுவை பாதுகாப்பாக தான் கையாளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமரை பொறுத்தவரை இது இரட்டை வெற்றியாக கருதப்படுகிறது. இந்தி பேசும் மாநிலங்களில் பீகாரில் பாஜகவின் வெற்றியானது, அடுத்து நடைபெற இருக்கும் தேர்தல்களுக்கு ஒரு ஊக்கமாக அமைவதோடு, இதற்கு முன்பு ஜார்கண்ட், டெல்லி மற்றும் மகாராஷ்ட்ரா மாநிலங்களில் அடைந்த தோல்வியில் இருந்து மீள உதவுகிறது. கோவிட்19, பொருளாதார நெருக்கடி மற்றும் சீனாவுடனான எல்லை நிலைப்பாடு என்று பல்வேறு பிரச்சனைகள் இருந்தபோதிலும், மோடியின் புகழ் அப்படியே உள்ளது என்ற பாஜகவின் கூற்றையும் இது பலப்படுத்தும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.