Advertisment

ஒட்டு மொத்த இந்தியர்களின் ஒற்றை வேண்டுதலாய் இருக்கும் அபிநந்தன் வர்த்தமான் யார் ?

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Wing Commander Abhinandan Varthaman, அபிநந்தன் வர்த்தமான் குடும்பத்தினர் நன்றி

Wing Commander Abhinandan Varthaman : பிப்ரவரி 14ம் தேதி, புல்வாமா என்ற பகுதியில், தற்கொலைப்படை தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டதன் விளைவாக 40 துணை ராணுவ வீரர்கள் மரணமடைந்தனர். இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் (26/02/2019) மிரேஜ் 2000 ரக விமானங்கள் பயன்படுத்தப்பட்டு, ஜெய்ஷ் - இ - முகமது தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன.

Advertisment

Wing Commander Abhinandan Varthaman

பதிலிற்கு பாகிஸ்தானில் இருந்து போர் விமானங்கள் இந்தியா வந்தன. அதே போல் இந்திய போர் விமானங்கள் எல்லை தாண்டி பாகிஸ்தானிற்கு சென்ற போது, ஒரு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதில் அபி நந்தன் ராணுவ வீரர்களால் சிறை பிடிக்கப்பட்டார். அவருடைய தகப்பனார் சிம்ஹகுட்டி வர்த்தமான் ஓய்வு பெற்ற ஏர் மார்ஷெல் ஆவார். இரண்டு வருடங்களுக்கு முன்பு, இயக்குநர் மணிரத்தினம் இயக்கிய காற்று வெளியிடை படத்தில் சிறப்பு ஆலோசனை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானின் பிடியில் இருக்கும் ஒரே இந்திய ராணுவ வீரர் அபி நந்தன் மட்டுமே. அவர் ராணுவ கொள்கைகளின் படியே நடத்தப்படுகிறார் என்று பாகிஸ்தானின் ராணுவத் துறையின் செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஆஷிஃப் காஃபூர் நேற்று மாலை 06:20 மணிக்கு ட்விட்டரில் ட்வீட் செய்துள்ளார்.

பாகிஸ்தானின் மாட்டிக் கொண்ட அபி நந்தன் தொடர்பாக இரண்டு வீடியோக்கள் நேற்று சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாக பரவி வந்தன. ஒன்று பாகிஸ்தானிய பொது மக்களிடம் மாட்டிக் கொண்ட அபி நந்தன் பற்றியது. மற்றொன்று, பாகிஸ்தான் ராணுவ முகாமில் அபி நந்தனை விசாரணை செய்வது. விசாரணையில் “நீங்கள் எந்த மிஷனை முடிப்பதற்காக இங்கே வந்தீர்கள் என்று கேட்டதிற்கு, “என்னை மன்னிக்கவும், என்னால் அதை கூற இயலாது” என்று கூறினார்.

ராஜ்யவர்தன் ரத்தோர் இது குறித்து ட்வீட் செய்த போது, ஒட்டு மொத்த நாடும் அபி நந்தன் வர்த்தமான் நலமுடன் வீடு திரும்ப வேண்டிக் கொள்கிறது என்று குறிப்பிட்டிருந்தார்.

பாதுகாப்புத் துறையின் அதிகாரப்பூர்வ இணைய தளமான bharat-rakshak.com கொடுத்த அறிவிப்பின் படி, அபி நந்தன் விமானியாக ஜூன் 19, 2004ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறார். வெலிங்கடனில் இருக்கும் வெலிங்க்டனில் இருக்கும் டிஃபென்ஸ் செர்விசஸ் ஸ்டாஃப் கல்லூரியில் தன்னுடைய பயிற்சியினை சமீபத்தில் தான் முடித்துள்ளார்.

அபி நந்தன் திருமணமானவர். அவருடைய தாயார் ஒரு மருத்துவர். அவருடைய தந்தை பரம் விஷிஷ்த் சேவா பதக்கம் (PVSM) பெற்றவர்.

8 வருடங்களுக்கு முன்பு என்.டி.டி.வியில் NDTV Good Times’ Rocky & Mayur Show என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அபி நந்தன் பற்றி ஒளிபரப்பட்டது.

மேலும் படிக்க : தற்காப்பு நடவடிக்கையாக பதிலடி கொடுக்க எங்களுக்கு உரிமையுள்ளது – பாகிஸ்தான்

India Pakistan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment