அபிநந்தனின் வீரச்செயலை நினைவூட்டும் பேட்ஜ்கள் : பெருமிதமாக அணிந்து கொண்ட விமானப் படையினர்

இந்த இரண்டு பேட்ஜ்களும் சௌரவ் சோர்டியா என்ற மாணவனின் வடிவமைப்பில் உருவானது.

இந்த இரண்டு பேட்ஜ்களும் சௌரவ் சோர்டியா என்ற மாணவனின் வடிவமைப்பில் உருவானது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
MIG-21 BISON, Wing Commander Abhinandan Varthaman’s squadron now Falcon Slayers,MiG 21 BISON Squadron, Sukhoi-30 squadron,

Man Aman Singh Chhina

Wing Commander Abhinandan Varthaman’s squadron now Falcon Slayers : இந்திய விமானப்படையின் 51வது படைப்பிரிவில் ( MiG 21 BISON Squadron) பணியாற்றி வருபவர் தமிழகத்தைச் சேர்ந்த அபிநந்தன் வர்த்தமான்.  பிப்ரவரி மாதம் 27ம் தேதியன்று, எல்லைத் தாண்டிய பயங்கரவாதத்தில் ஈடுபட்ட பாகிஸ்தான் நாட்டின் எஃப் 16 போர் விமானத்தை சுட்டு வீழ்த்தினார் இந்திய விமானி அபிநந்தன் வர்த்தமான்.

Advertisment

ஃபால்கான் ஸ்லேயர்ஸ் - பேட்ஜினைப் பெற்ற இந்திய விமானப்படையின் 51வது பிரிவினர்

தாக்குதலுக்காக வந்த மற்றொரு விமானத்தை பின் தொடர்ந்து செல்ல, அவரின் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டு போர் கைதியாக மார்ச் மாதம் 1ம் தேதி வரை பாகிஸ்தானில் வைக்கப்பட்டார்.

அபிநந்தனின் வீரதீர செயலை போற்றும் வகையில் துணியாலான பேட்ஜ்கள் MiG 21 BISON Squadron - படையினருக்கு வழங்கப்பட்டது. அதற்கு ஃபால்கான் ஸ்லேயர்ஸ் (Falcon Slayers) என்று பெயரிடப்பட்டுள்ளது. அதில் MIG-21 BISON விமானம் சிவப்பு நிறத்தில் இருக்கும் F-16 விமானத்தை தாக்குவது போன்ற உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.

அம்ராம் டாட்ஜரான SU-30MKI விமானப் படைப்பிரிவு

Advertisment
Advertisements

SU-30MKI படைப்பிரிவில் பணி புரிபவர்களுக்கு சுகோய் 30 போர் விமானம் AMRAAM ஏவுகணையின் தாக்குதலில் இருந்து தப்பிப்பது போன்ற உருவம் பொறிக்கப்பட்ட பேட்ஜ்வழங்கப்பட்டுள்ளது. மார்ச் 27ம் தேதி பாகிஸ்தான் ஏவிய, அமெரிக்காவில் உருவாக்கப்பட்ட அம்ராம் ஏவுகணையின் தாக்குதலில் இருந்து தப்பித்ததால் AMRAAM Dodger அம்ராம் டாட்ஜர் என்ற பெயரும் அதில் சூட்டப்பட்டுள்ளது.

மேலும் படிக்க : விடுமுறையே அளித்தாலும் விமானப்படையிலேயே தான் இருப்பேன் – அபிநந்தன்

இந்திய விமானப்படை செய்தித் தொடர்பாளர் கேப்டன் அனுப்பம் பானர்ஜீ பேசுகையில் இந்த பேட்ஜ்கள் பெருமையை நினைவு கூறுவதற்காக மட்டுமில்லை, விமானியின் சாதனையை நினைப்படுத்துவதற்கும் தான் என்று கூறினார்.

இந்த இரண்டு பேட்ஜ்களும் சௌரவ் சோர்டியா என்ற மாணவனின் வடிவமைப்பில் உருவானது. 2015ம் ஆண்டு கல்லூரியில் படிக்கூம் போதே SU-30MKI பிரிவினருக்கான பேட்ஜினை இவர் வடிவமைத்தார். தேஜஸ் படையினருக்கான முதல் பேட்ஜினை வடிவமைத்தவரும் இவர் தான்.

Iaf

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: