2018ம் ஆண்டு உலக அளவில் மிகப் பெரிய பாதிப்பினை உருவாக்கிய கேரள வெள்ளம்

இயற்கை பேரிடரால் அதிக அளவு இழப்பினை சந்தித்த நான்காவது இடமாக கேரளா அறிவிப்பு

WMO Report 2018 :கேரளாவில் இந்த ஆண்டு, பருவ மழை முன்னதாகவே தொடங்கிவிட்டது. அதன் தொடர்ச்சியாக மேற்கு தொடர்ச்சி மாவட்டத்தில் மழை தொடர்ந்து பெய்து கொண்டே இருந்தது. விரைவில் அம்மாநிலத்தில் உள்ள அணைத்து நீர் நிலைகளும் நிரம்பத் தொடங்கின. ஆசியாவின் மிகப் பெரிய அணைகளில் ஒன்றான இடுக்கி, செறுதுணி அணை நிரம்பியது. 26 ஆண்டுகள் கழித்து அனைத்து மதகுகளும் திறக்கப்பட்டு நீர் வெளியேற்றப்பட்டது.

ஆனாலும் கூட, மழையின் வரத்து அதிகரித்து வந்த வண்ணமே இருந்தது. ஆகஸ்ட் மாதத்தின் தொடக்கத்தில் அனைத்து மாவட்டங்களுக்கும் ரெட் அலர்ட் கொடுத்து, மக்களை பாதுகாப்பான இடத்திற்கு செல்ல உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மேலும் படிக்க : 26 ஆண்டுகள் கழித்து திறக்கப்பட்ட செறுதுணி அணை

உலக வானிலை ஆய்வு அமைப்பு (World Meteorological Organization) அறிக்கை

நேற்று உலக வானிலை ஆய்வு அமைப்பு (World Meteorological Organization) அறிக்கை ஒன்றை வெளியிட்டது. தொடர்ந்து நான்காவது ஆண்டாகவும் 2018 மிகவும் வெப்பமானதாக இருந்ததாக ஆய்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

ஜப்பான், கொரியா, நைஜீரியா போன்ற நாடுகளில் வெள்ளம் ஏற்பட்டது தொடர்பான அறிக்கை சமர்பிக்கப்பட்டத்து. அதே போல், பாகிஸ்தானில் இந்த வருடம் வெப்பத்தின் அளவு அதிகமாக இருந்தது.

உலக அளவில் ஏற்பட்ட இயற்கை பேரிடரால் பொருளாதார அளவில் பெருத்த இழப்பினை சந்தித்த முதல் இடமாக அமெரிக்காவின் ஃப்ளோரண்ஸ் மாகாணமும், நான்காவது இடமாக கேரளாவும் அறிவிக்கப்பட்டது.

சராசரியாக 53 புயல்கள் மட்டுமே ஒவ்வொரு வருடமும் ஏற்படும். ஆனால் இந்த வருடம் மட்டும் சுமார் 70 புயல்கள் உருவாகியுள்ளன. அவை அனைத்தும் வடக்கு ஹெமிஸ்பியரில் ஏற்பட்டதன் விளைவாக 2018ம் ஆண்டில் அனேக ஐரோப்பிய நாடுகள் கடுமையான வறட்சியை சந்தித்தன.

இந்த வருடம் மட்டும் 17.7 மில்லியன் மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர். ஆனால் மழை மற்றும் இதர கால நிலை மாற்றங்களால் 2.3 மில்லியன் மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

WMO Report 2018 கேரள வெள்ளம் ஏற்படுத்திய பாதிப்பு :

1920ம் ஆண்டிற்கு பின்பு தற்போது தான் கேரளாவில் இப்படி வரலாறு காணாத அளவு மழைப் பொழிவும், இடர்பாடுகளும் ஏற்பட்டன. 1.4 மில்லியன் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டார்கள். அதே போல் 5.4 மில்லியன் மக்கள் இந்த வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டார்கள்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close