Advertisment

சபரிமலையில் பெண்கள் : பிந்து மற்றும் கனக துர்காவிற்கு எதிராக கேரளாவில் போராட்டம்

18 படிகள் வழியாக செல்லாமல், வி.ஐ.பி. செல்லும் வழியாக சென்று ஐயப்பனை தரிசனம் செய்திருக்கின்றனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Women Entered Sabarimala Temple

Women Entered Sabarimala Temple

Women Entered Sabarimala Temple : செப்டம்பர் 28ம் தேதி, உச்ச நீதிமன்றம், ஐயப்பன் கோவிலிற்குள் அனைத்து வயது பெண்களும் வழிபாட்டிற்கு செல்லலாம் என்று தீர்ப்பு வழங்கியது. அதனைத் தொடர்ந்து அக்டோபர் மாதத்தில் மகர விளக்கு பூஜைக்காக ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பெண் அமைப்புகளை சேர்ந்த பெண்கள் சிலர் கோவிலுக்குள் செல்ல முற்பட்டனர்.

Advertisment

ஆனால் ஐயப்ப பக்தர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்ததைத் தொடர்ந்து பெண்கள் பலர் திருப்பி அனுப்பப்பட்டனர். கமலா, ரெஹனா ஃபாத்திமா, திருப்தி தேசாய், மனிதி அமைப்பை சேர்ந்தவர்களின் முயற்சியும் வீணாகிவிட்டது.

மேலும் படிக்க : ஐயப்பன் கோவிலில் இதுவரை பெண்கள் தரிசனமே செய்தது இல்லையா ?

Women Entered Sabarimala Temple

இந்நிலையில் இன்று காலை பிந்து மற்றும் கனகதுர்கா என்ற இரண்டு பெண் பக்தர்கள் சபரிமலை ஐயப்பனை தரிசித்துள்ளனர்.  41 நாட்கள் விரதம் இருந்து இருமுடி கட்டிக்கொண்டு  செல்லும் பக்தர்கள் தான் 18 படிகள் ஏறவேண்டும் என்ற விதிமுறை இருப்பதால், இப்பெண்கள் இருவரும்  18 படிகள் வழியாக செல்லாமல், வி.ஐ.பி. செல்லும் வழியாக சென்று ஐயப்பனை தரிசனம் செய்திருக்கின்றனர்.

டிசம்பர் 24ம் தேதியில் இருந்தே இப்பெண்கள் கோவிலுக்குள் செல்ல முற்பட்டனர். ஆனால் போராட்டக்காரர்களின் கடும் எதிர்ப்பின் விளைவாக காவல் துறையினர் திருப்பி அனுப்பி வைத்துள்ளனர்.

ஆனால் இன்று அதிகாலையில் பம்பையில் இருந்து சபரிமலை சென்ற பெண்கள், அதிகாலை 03:45 மணிக்கு ஐயப்பனை தரிசனம் செய்துள்ளனர். மலப்புரம் அங்காடிபுரத்தில் கனகதுர்காவின் வீட்டிற்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. 40 வயதான இருவரும் கேரளத்தின் மலப்புரம் மற்றும் கோழிக்கோட்டில் வசதித்து வருகின்றனர்.

Women Entered Sabarimala Temple : கோயில் நடை இழுத்து மூடப்பட்டது

கோவிலிற்குள் பெண்கள் நுழைந்தால் கோவிலின் நடை இழுத்து மூடப்படும் என்று ஏற்கனவே தலைமை தந்திரி கூறியிருந்தார். பிந்து மற்றும் கனக துர்காவின் வருகையை ஒட்டி, கோவிலின் நடை தற்போது மூடப்பட்டுள்ளது.

மீண்டும் நடை திறக்கப்பட்டது :

பெண்களின் வருகையைத் தொடர்ந்து பரிகார பூஜைக்காக ஒரு மணி நேரம் கோவிலின் நடை சாத்தப்பட்டது. பரிகார பூஜை முடிவடைந்த நிலையில் மீண்டும் கோவிலின் நடை திறக்கப்பட்டது.

பெண்களுக்கு எதிராக கேரளாவில் போராட்டம்

பிந்து மற்றும் கனக துர்கா இருவருக்கும் எதிராக  தற்போது கேரளாவில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

 

Women Entered Sabarimala Temple

Sabarimala Lord Ayappa
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment