சிந்திப்பவர்களை சுட்டுக் கொல்ல வேண்டுமாம்! சொல்வது யார் தெரியுமா?

கர்நாடக பாஜக எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு

By: July 27, 2018, 6:37:23 PM

கர்நாடக பாஜக எம்.எல்.ஏ சர்ச்சையான கருத்து ஒன்றினை வெளியிட்டிருக்கிறார். விஜய்புரா தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ மற்றும் வாஜ்பாய் ஆட்சியில் எம்.பியாக பணியாற்றியவர் பசனகௌடா.

2010 வரை பாஜக கட்சியில் கட்சிப் பணியாற்றிய பசனகௌடா பின்னர் மதசார்பற்ற ஜனதா தளத்தில் சேர்ந்தார். பின்னர் 2013ல் மீண்டும் பாஜகவில் இணைந்தார்.

அடிக்கடி சர்ச்சையில் பேசி மாட்டிக் கொள்வது பாஜக கட்சியினருக்கு வழக்கம். பசனகௌடா ஏற்கனவே கடந்த ஜூன் அன்று “கார்ப்பேரசனில் வேலை பார்க்கும் ஊழியர்கள் அனைவரும் இந்துக்களுக்காக மட்டுமே வேலை பார்க்க வேண்டும்” என்று குறிப்பிட்டு பேசினார். மேலும், ”என்னுடைய அருகிலோ, என்னுடைய அலுவலகத்திற்கோ தொப்பி அணிந்து, புர்கா உடுத்திக் கொண்டு யாரும் வரக்கூடாது” என்று குறிப்பிட்டார்.

ராஜஸ்தான்  பாஜக தலைவர் பாபர் பற்றி கூறிய  சர்ச்சைக்குரிய செய்தியினை படிக்க

இந்நிலையில் நேற்று இண்டெல்க்சுவல் குறித்து பேசினார் அந்த பாஜக எம்.எல்.ஏ. அதாவது “மக்களின் வரி பணத்தில் உயிர் வாழ்ந்து கொண்டு , தேசத்திற்கும் தேசிய ராணுவத்திற்கும் எதிராக கொள்கைகளை மக்களிடையே பரப்பி வருகிறார்கள்” என்று பேசினார்.

மேலும் இந்நிலையில் “நான் மட்டும் இந்தியாவின் உள்துறை அமைச்சராக இருந்தால் இந்நாட்டில் சிந்திக்கும் அனைத்து இண்டெல்லக்சுவல் அனைவரையும் சுட்டுக் கொன்றுவிடுவேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Would have ordered to shoot intellectuals had i been home minister karnataka bjp mla

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X