கண்காணிப்பில் உள்ளவர்களுக்கு காய்ச்சல், சுவாசப் பிரச்சினைகள் மற்றும் பிற அறிகுறிகள் இருப்பதாக சுகாதாரத்துறை தெளிவுபடுத்தியது. இதுவரையில் எந்தவொரு பாஸிட்டிவ் (கொரோனா வைரஸ் பாதிப்பு) வழக்கும் மாநிலத்தில் இல்லை என்றும் அது மேலும் கூறியுள்ளது.
அதே நேரத்தில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தால் நியமிக்கப்பட்ட மருத்துவர்கள் குழு கொச்சின் சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தருகிறது.
இந்த குழு, விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள பயணிகளுக்கான சோதனை பணிகளை ஆராய்ந்த பின்னர், அங்கு செய்யப்பட்டிருக்கும் ஏற்பாடுகள் குறித்து திருப்தி தெரிவித்தது.
| இந்த குழுவில், டெல்லி லேடி ஹார்டிங் மருத்துவக் கல்லூரியின் நுரையீரல் நிபுணர் டாக்டர் புஷ்பேந்திர குமார் வர்மா இடம்பெற்றுள்ளார். மேலும், டாக்டர் ரமேஷ் சந்திர மீனா, உள் மருத்துவ நிபுணர், சப்தர்ஜங் மருத்துவமனை, டெல்லி; டாக்டர் ஷௌகத் அலி, டி.டி., நோய்களுக்கான தேசிய மையம், காலிகட்; டாக்டர் ஹம்சா கோயா மற்றும் டாக்டர் ரபேல் டெடி APHO கள், விமான நிலையத்தில் உள்ள வசதிகளை மதிப்பீடு செய்தனர் |
தரவுகளின்படி, என்.சி.ஓ.வி பரவியதாக அறிவிக்கப்பட்ட இடங்களிலிருந்து பெரும்பாலான மக்கள் கோழிக்கோட்டிற்கு தான் திரும்பியுள்ளனர். 72 பயணிகள் கோழிக்கோட்டிற்கு வந்துள்ளனர்.
NCoV அறிகுறிகளைக் கொண்ட நோயாளிகளை மருத்துவமனையில் அனுமதித்ததில், எர்ணாகுளம் அதிகபட்சமாக மூன்று வழக்குகளுடன் உள்ளது.
திருவனந்தபுரம், பதானமித்திட்டா, ஆலப்புழா, மற்றும் திருச்சூர் ஆகிய பகுதிகளின் மருத்துவமனைகளில் NCoV அறிகுறிகளுடன் சிலர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் அவரச கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், "சீனாவின் வுஹான் மாகாணத்தில் கொரோனா வைரசின் தாக்கம் அதிகமாக உள்ளதாக தகவல்கள் வருகின்றன.
Wuhan Corona Virus: பிரதமர் மோடிக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் அனுப்பிய கடிதம்
எனவே, அந்த மாகாணத்தில் வசிக்கும் இந்தியர்களை இந்த வைரஸ் தாக்கத்திலிருந்து காப்பாற்றும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அந்த மாகாணத்துக்கு அருகே உள்ள விமான நிலையத்திலிருந்து, வுஹான் மாகாணத்துக்கு உடனடியாக சிறப்பு விமானங்களை இயக்க வேண்டும்.
அவற்றின் மூலம் அங்குள்ள கேரள மாநிலத்தவர் உள்ளிட்ட இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்ப உரிய நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டும்" என்று தமது கடிதத்தில் பினராயி விஜயன் வலியுறுத்தியுள்ளார்.