Advertisment

யஷ்வந்த சின்ஹா; ஐ.ஏ.எஸ் முதல் குடியரசு தலைவர் வேட்பாளர் வரை; ஓர் பார்வை

குடியரசு தலைவர் தேர்தலில் எதிர்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த சின்ஹா; அவரின் ஐ.ஏ.எஸ் பணி முதல் அரசியல் வாழ்க்கை வரை ஓர் பயணம்

author-image
WebDesk
New Update
யஷ்வந்த சின்ஹா; ஐ.ஏ.எஸ் முதல் குடியரசு தலைவர் வேட்பாளர் வரை; ஓர் பார்வை

Sourav Roy Barman

Advertisment

Yashwant Sinha: Ex-IAS, former minister, BJP rebel, now Opp joint candidate for President: 1993 இல் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் யஷ்வந்த் சின்ஹா ​​பா.ஜ.க.,வில் இணைந்ததை அறிவித்த மூத்த தலைவர் எல்.கே.அத்வானி இது கட்சிக்கு "தீபாவளி பரிசு" என்று விவரித்தார். முன்னாள் அரசு அதிகாரியான யஷ்வந்த சின்ஹா, அவர் சேர்ந்த கட்சி மற்றும் அவர் நீண்ட காலமாக வளர்ந்த கட்சியைப் போலவே அரசியலில் நீண்ட தூரம் பயணித்துள்ளார்.

அத்வானியால் வளர்க்கப்பட்டு, 1999 முதல் 2004 வரையிலான அடல் பிஹாரி வாஜ்பாய் அரசாங்கத்தில் முக்கியத்துவம் வாய்ந்த நிதி மற்றும் வெளியுறவு அமைச்சராக இருந்த யஷ்வந்த சின்ஹா, நரேந்திர மோடியின் கீழ் பா.ஜ.க.,வில் இருந்து விலகி தனது அரசியல் சுயவிவரத்தை மாற்றிக்கொண்டு, ​​இப்போது குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் ஒருமித்த வேட்பாளராக வெளிவந்துள்ளார்.

குடியரசுத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு (NDA) ஒரு சில இடையூறுகளை தவிர பெரிதாக இடையூறுகள் இருக்காது என்று கருதப்பட்டாலும், யஷ்வந்த் சின்ஹாவின் வேட்புமனுவானது அவரது முன்னாள் கட்சி மற்றும் எதிர்கட்சி ஆகிய இரண்டிற்கும் பெரும் அடையாளத்தைக் கொண்டுள்ளது, அது மோடி அரசாங்கத்திற்கு எதிராக ஒரு தார்மீக நிலைப்பாட்டை எதிர்பார்க்கிறது.

இதையும் படியுங்கள்: குடியரசு தலைவர் தேர்தல்; நம் சமகாலத்தில் குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுத்தல்

செவ்வாயன்று திரிணாமுல் காங்கிரஸில் இருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்த யஷ்வந்த் சின்ஹா தனது ​​ட்விட்டர் பக்கத்தில், “திரிணாமுல் காங்கிரஸில் மம்தாஜி எனக்கு அளித்த மரியாதை மற்றும் கவுரவத்திற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இப்போது ஒரு பெரிய தேசிய நோக்கத்திற்காக நான் கட்சியில் இருந்து ஒதுங்கி எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்காக பணியாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது. மம்தா இந்த நடவடிக்கையை ஆமோதிப்பார் என்று நான் நம்புகிறேன்,” என்று பதிவிட்டுள்ளார்.

1984 இல் ஐஏஎஸ் பதவியை ராஜினாமா செய்த பிறகு யஷ்வந்த் சின்ஹாவின் முதல் அரசியல் பயணம் ஜனதா தளம் கட்சியில் ஆரம்பித்தது, மேலும் அவர் 1988 இல் ராஜ்யசபா உறுப்பினரானார். பா.ஜ.க.,வில் மிகப்பெரிய புகழ் பெற்ற பிறகு, பாகிஸ்தான் பயணத்தின் போது முகமது அலி ஜின்னாவைப் புகழ்ந்ததற்காக தனது வழிகாட்டியான அத்வானியை எதிர்க்கட்சித் தலைவரிலிருந்து பதவி விலகக் கோரி குரல் எழுப்பிய 2005 க்குப் பிறகு, ​​​​கட்சியில் யஷ்வந்த் சின்ஹாவின் ஓரங்கட்டல் தொடங்கியது. 10 ஆண்டுகாலம் பா.ஜ.க எதிர்க்கட்சியாக இருந்ததால், அத்வானியே தனது அதிகாரத்தைக் கைப்பற்ற இயலாமையால் பொருத்தமற்றவராக ஆக்கப்பட்டார், மேலும், யஷ்வந்த் சின்ஹா ​​அரசியலில் மறைந்து போனார்.

பா.ஜ.க தலைமையில் மோடி ஏறியதைத் தொடர்ந்து யஷ்வந்த் சின்ஹாவின் இறுதி முறிவு ஏற்பட்டது, சின்ஹா பகிரங்கமாக மோடியை விமர்சித்தார், இறுதியில் 2018 இல் கட்சியை விட்டு வெளியேறுவதற்கு முன்பு, அதன் தற்போதைய வடிவத்தில், இது "ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல்" என்று கூறினார். அப்போதிருந்து, ஜார்கண்டின் ஹசாரிபாக் தொகுதியில் இருந்து மூன்று முறை மக்களவை எம்.பி.யாக இருந்த 84 வயதான சின்ஹா, தனது அரசியல் வாழ்க்கையை புதுப்பிக்க முயன்று தோல்வியுற்றார், காஷ்மீர் போன்ற பிரச்சனைகளில் ஒத்த எண்ணம் கொண்ட தலைவர்களுடன் 'ராஷ்டிர மஞ்ச்' அமைப்பில் ஈடுபட்டார். இறுதியாக திரிணாமுல் காங்கிரஸில் தஞ்சம் அடைவதற்கு முன்பு, 2019 இல் ரிலென்ட்லெஸ் என்ற சுயசரிதையை எழுதினார்.

கூட்டு வேட்பாளரை சுற்றி எதிர்க்கட்சிகளை அணிதிரட்டுவதில் திரிணாமுல் காங்கிரஸின் தலைவர் மம்தா பானர்ஜி முன்னிலை வகித்ததுதான் இறுதியாக யஷ்வந்த் சின்ஹா ​​தேர்ந்தெடுக்கப்படுவதற்கு வழிவகுத்தது. சரத் ​​பவார், ஃபரூக் அப்துல்லா மற்றும் கோபாலகிருஷ்ண காந்தி மறுத்த பிறகு, சின்ஹா பின்னடைவு தேர்வாக இருந்திருக்கலாம், ஆனால், சின்ஹா ​​இந்த புதிய வாழ்க்கை சுவாசத்தை வரவேற்பார்.

சின்ஹா, செல்வாக்கான குடும்பத்தில் பிறந்தவர். அவரது தந்தை பிபின் பிஹாரி ஷரன் ஒரு சிறந்த வழக்கறிஞர். யஷ்வந்த சின்ஹா 1958 இல் அரசியல் அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றார், பின்னர் IAS இல் சேருவதற்கு முன்பு 1958 முதல் 1960 வரை பாட்னா பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் கற்பித்தார்.

சின்ஹா, பீகாரில் நீண்ட ஆண்டுகள் பல்வேறு பதவிகளில் பணியாற்றினார், மத்திய அமைச்சரவையில் சேருவதற்கு முன்பு வெளிநாட்டில் அரசாங்கத்தின் பிரதிநிதியாகவும் இருந்துள்ளார். 1971 மற்றும் 1973 க்கு இடையில், அவர் ஜெர்மனியில் உள்ள இந்திய தூதரகத்தில் முதல் செயலாளராக (வர்த்தகம்) இருந்தார். தொடர்ந்து, 1973 முதல் 1974 வரை பிராங்பேர்ட்டில் இந்திய கன்சல் ஜெனரலாக பணிபுரிந்தார். ஐஏஎஸ் பதவியை ராஜினாமா செய்வதற்கு முன்பு, போக்குவரத்து அமைச்சகத்தில் இணைச் செயலாளராகப் பணியாற்றினார்.

ஜனதா கட்சியில், சின்ஹா ​​அகில இந்திய பொதுச் செயலாளராக பணியாற்றினார், மேலும் நவம்பர் 1990 மற்றும் ஜூன் 1991 க்கு இடையில் சந்திர சேகரின் குறுகிய கால அமைச்சரவையில் நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டார். மற்ற கட்சிகளுக்குச் சென்றாலும், ​​சின்ஹா ​​சந்திர சேகரை அவரது "அரசியல் குரு" என்று எப்போதும் குறிப்பிடுகிறார்.

சந்திரசேகரின் அறிவுரைக்கு எதிராக பா.ஜ.க.,வில் இணைந்தேன் என்று சின்ஹா ​​தனது சுயசரிதையில் எழுதியுள்ளார். அவருக்கு ஆர்.எஸ்.எஸ் பின்னணி இல்லாததால், பா.ஜ.க தன்னை "பயன்படுத்தி நிராகரிக்கும்" வாய்ப்புள்ளது என்று சந்திரசேகர் எச்சரித்ததாக அவர் கூறுகிறார். சின்ஹா ​​மேலும் கூறியதாவது: நான் ஒருபோதும் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினராக இருந்ததில்லை. ஆர்வத்தால் கூட நான் காக்கி அரைக் காற்சட்டை அல்லது கருப்பு தொப்பி அணிந்ததில்லை அல்லது ஷகாவிற்குச் சென்றதில்லை. எனவே, பா.ஜ.க.வின் தனிச்சிறப்பான இந்த தந்தைவழி (ஆர்.எஸ்.எஸ்) மீது என்னால் ஒரு சிறிய உரிமைகோரலைக் கூட வைக்க முடியாது.

25 ஆண்டுகளாக அவர் பணியாற்றிய கட்சியில் இருந்து தன்னை விலக்கிக் கொண்ட சின்ஹா, ஜவஹர்லால் நேருவை ஒரு பெரிய செல்வாக்கு என்று அழைக்கிறார், அவரை ஒரு இளம் ஐ.ஏ.எஸ் பயிற்சியாளராக சந்தித்ததை குறிப்பிடுகிறார். "என்னுடைய பிற்பகுதி வாழ்க்கையில் எனது பல முடிவுகளும் பதில்களும் அவர் (நேரு) அன்று டெல்லியில் பேசியதை அடிப்படையாகக் கொண்டவை."

அவரது கைவிடப்பட்ட அரசியல் வாழ்க்கையைத் தவிர, எதிர்கட்சித் தலைவர்கள் கூட சின்ஹாவை ஒரு திறமையான அமைச்சர் என்று ஒப்புக்கொள்கிறார்கள். முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒருமுறை, சந்திரசேகர் அரசு விழாமல் இருந்திருந்தால், சின்ஹா ​​"முதல் சீர்திருத்தவாத நிதியமைச்சராக இருந்திருக்கலாம், ஆனால் நாட்டின் பொருளாதாரத்தை மாற்றக்கூடிய பட்ஜெட்டைத் தாக்கல் செய்வதிலிருந்து அவர் தடுக்கப்பட்டார்" என்று கூறினார்.

வாஜ்பாய் அமைச்சரவையில், சின்ஹா ​​1998 மற்றும் 2002 க்கு இடையில் இரண்டு முறை நிதியமைச்சராக இருந்தார். 2002 இல், அவர் வெளியுறவு அமைச்சர் ஜஸ்வந்த் சிங்குடன் இலாகாக்களை பரிமாறிக்கொண்டார். தற்செயலாக, சின்ஹாவின் தந்தை அவருக்கு ராஜ்புத் வீரர் ஜஸ்வந்த் சிங் மார்வாரின் பெயரை சூட்டினார்.

சின்ஹா ​​தனது பணியை பற்றி பேசுகையில், முன்னாள் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் கொலின் பவலுடன் தனது நல்லுறவை அடிக்கடி குறிப்பிடுகிறார், மேலும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் கட்டுரையில், அமெரிக்க ஜனாதிபதியை (ஜார்ஜ் புஷ்) ஓவல் அலுவலகத்தில் சந்திக்க அழைக்கப்பட்ட ஒரே இந்திய வெளியுறவு மந்திரி அவர் தான் என்று எழுதினார்.

சின்ஹா ​​பா.ஜ.க மற்றும் தீவிர அரசியலில் இருந்து நகர்ந்திருக்கலாம் என்றாலும், அவரது மகன் ஜெயந்த் கட்சியின் ஒரு அங்கமாகவே இருக்கிறார் மேலும் அவரது தந்தையின் முன்னாள் தொகுதியான ஹசாரிபாக் எம்.பி.யாக உள்ளார். கடந்த மோடி ஆட்சியில் மத்திய இணை அமைச்சராக இருந்தவர் ஜெயந்த்.

இந்த சமீபத்திய அரசியல் பாய்ச்சலின் மூலம் சின்ஹா ​​எதை நோக்கமாகக் கொண்டிருக்க முடியும்? அவரது சுயசரிதையான ரிலென்ட்லெஸ்ஸில் அவர் எழுதுவது போல், "கணக்கிடப்பட்ட அபாயங்களை எடுக்கும் இந்தப் பழக்கம் இன்றுவரை வாழ்கிறது."

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India President Of India Yashwant Sinha
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment