சகிப்புத்தன்மைக்கு பாடம் சொல்லிக் கொடுத்த ஸொமாட்டோ… ட்விட்டரை விட்டு தலை தெறிக்க ஓடிய ‘அந்த’ வாடிக்கையாளர்!

கடந்த வருடம் ஓலா ஆப்பிலும் இது போன்ற பிரச்சனையை இஸ்லாமிய ஓட்டுநர் ஒருவர் சந்திக்க நேரிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

By: Updated: August 1, 2019, 12:15:52 PM

Zomato customer cancels the order for allocated a non-Hindu rider : நாளுக்கு நாள் இந்தியாவில் சகிப்புத்தன்மை குறைந்து வருகிறதா என்ற கேள்வி தான் கேட்க தோன்றுகிறது. ஜபால்பூரில் இருக்கும் அமித் சுக்லா தனக்கான உணவினை பிரபல உணவு வழங்கும் நிறுவனமான ஸொமாட்டோவில் ஆர்டர் செய்துள்ளார்.

அவருடைய ஆர்டர் ஏற்றுக்கொள்ளப்பட்டு, அவருக்கான உணவு தயார் செய்யப்பட்டு அனுப்பியும் உள்ளது அந்நிறுவனம். ஆனால் தனக்கு உணவு கொண்டு வருபவர் இஸ்லாமிய இளைஞர், ஃபையாஸ், என அறிந்தவுடன் அமித் சுக்லா தனக்கான உணவினை கேன்சல் செய்து, பணத்தினை ரீஃபண்ட் செய்யும் படி கேட்டுக் கொண்டார்.

 

உங்களின் வேண்டுதலுக்கு இணங்க உங்களின் ஆர்டர் கேன்சல் செய்யப்படுகிறது. ஆனால் ரீஃபண்ட் செய்ய இயலாது என்று கூறிவிட்டது ஸொமாட்டோ. இதனைத் தொடர்ந்து இந்த விவகாரத்தை ட்விட்டரில் எடுத்து வந்து ஸொமாட்டோவினை டேக் செய்து, இந்து அல்லாதவர்கள் மூலமாக நமக்கு உணவினை அளிக்கிறது ஸொமாட்டோ நிறுவனம் என்று தன்னுடைய இஸ்லாமிய வெறுப்பினை ட்வீட் மூலமாக வெளிப்படுத்தினார்.

இந்த ட்வீட்டை ஸொமாட்டோ தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ரீட்வீட் செய்து “உணவுகளுக்கு மதம் கிடையாது. உணவே மதம் தான்” என்று கூறி அமித் சுக்லாவின் தேவையற்ற கலவர மனப்பான்மைக்கு முற்றுப்புள்ளி வைத்தது. இந்தியா முழுவதும் ஸொமாட்டோவின் பொறுப்பான பதில் ட்ரெண்டாக துவங்கியது. இந்த பதிலை பல்வேறு தரப்பிலும் மக்களும், அரசியல் தலைவர்களும் வரவேற்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து அமித் சுக்லா தன்னுடைய ட்விட்டர் அக்கௌண்ட்டினை டீ-ஆக்டிவேட் செய்துவிட்டு சமூக வலைதளங்களில் இருந்து தலைமறைவாகிவிட்டார்.

Leaders praises Zomato’s reactions

இந்த ட்வீட்டினை தொடர்ந்து, மக்கள் ஸொமாட்டோவினை கொண்டாட துவங்கிவிட்டனர். இந்த நிறுவனத்தின் சி.இ.ஓ தீப்பிந்தர் கோயல் கூறுகையில் “நாங்கள் இந்தியா என்ற எண்ணத்தை வரவேற்கின்றோம். இந்த நாட்டின் பன்முகத்தன்மையை நாங்கள் நினைத்து பெருமை கொள்கின்றோம். இது எங்களுக்கு மதிப்பினை தரும் பொக்கிசமாகவே பார்க்கின்றோம். இதை உணராது எங்களை விட்டு ஒரு வாடிக்கையாளர் செல்கிறார் என்றால் அதற்காக நாங்கள் வருந்த ஒன்றுமில்லை” என்று கூறியுள்ளார்.

ப.சிதம்பரம் கருத்து

இது நாள் வரையில் நான் ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்ததில்லை. ஆனால் இனி ஸொமாட்டோவில் நிச்சயம் ஆர்டர் செய்வேன் என்று நம்புகிறேன் என்று அவர் கூறினார்.

முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் எஸ்.ஒய். குரேஷி

தலைவணங்குகிறேன் தீப்பிந்தர் கோயல். நீங்கள் தான் இந்தியாவின் உண்மையான முகம். உங்களை நினைத்து நான் பெருமை கொள்கின்றேன் என்று கூறியுள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா

உங்களின் நிறுவனத்திற்கு மரியாதை அளிக்கின்றேன். உங்களின் செயலி எனக்கு மிகவும் பிடிக்கும். அதையும் தாண்டி உங்களின் நிறுவனத்தை மதிக்க நீங்கள் எனக்கு ஒரு நல்ல காரணத்தை அளித்துள்ளீர்கள் என்று கூறியுள்ளார்.

இந்த பிரச்சனை குறித்து ஃபையாஸிடம் கேள்வி எழுப்பிய போது, ஆம், நான் மிகவும் மனமுடைந்துள்ளேன். நாங்கள் ஏழைகள். எங்களுக்கு வேறு வழியில்லை. என்னால் வேறு என்ன கூற இயலும் என்று வருத்தம் தெரிவித்துள்ளார். அமித் சுக்லாவோ தன்னுடைய ட்விட்டர் அக்கௌண்ட்டை காலி செய்துவிட்டு ஓடிவிட்டார்.

இஸ்லாமியர்களுக்கு எதிராக இது போன்ற சம்பவங்கள் நடப்பது இது ஒன்றும் முதல் முறையில்லை என்பது நான் அனைவரும் அறிந்த ஒன்றே. கடந்த வருடம் ஓலா ஆப்பிலும் இது போன்ற பிரச்சனையை இஸ்லாமிய ஓட்டுநர் ஒருவர் சந்திக்க நேரிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க : முத்தலாக் தடை மசோதா குறித்து நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள் இதோ!

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Zomato customer cancels order for allocated a non hindu rider gets a taste of tolerance

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X