11,000 earthquakes in 2018 Indonesia : கடந்த வருட நினைவுகளை மீண்டும் ஒரு முறை யோசித்துப் பார்க்க வேண்டிய நிலை அடிக்கடி வருகிறது. கடுமையான வெள்ளம், மழை, புயல் சீற்றங்களை இந்தியா மட்டும் அல்லாது உலக நாடுகள் அனைத்தும் சேர்ந்தே எதிர்த்தது.
இந்தோனேசியா மட்டும் கடந்த வருடத்தில் 11,000 முறைகளுக்கும் மேல் நில நடுக்கத்தை சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தீவுகளைச் சுற்றிலும் இருக்கும் எரிமலைச் சீற்றங்களால் அடிக்கடி அந்த பகுதிகளில் நில நடுக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவது வழக்கம். நில நடுக்கம் மட்டுமல்லாது ஒரு முறை சுனாமியும் வந்திருப்பதும் பலருக்கும் ஞாபகத்தில் இருக்கலாம்.
மேலும் படிக்க : எரிமலை வெடிப்பினால் உருவான சுனாமி
11,000 earthquakes in 2018 Indonesia
2018ம் ஆண்டில் மட்டும் சுமார் 11,557 முறை நில நடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. அதில் 297 முறை ஏற்பட்ட நிலநடுக்கங்கள் ரிக்டர் அளவுகோளில் 5 புள்ளிகளை கடந்துள்ளதாக மெட்டியோரோலஜி, கிளைமேட்டாலஜி, மற்றும் ஜியோஃபிசிக்ஸ் ஏஜென்சி அறிவித்துள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் மத்திய சுலவேசி பகுதியில் ஏற்பட்ட நிலநடக்கத்தின் விளைவாக 4000 பேர் கொல்லப்பட்டனர். சுனாமி நிகழ்விற்கு பிறகு அதிக மக்களை காவு வாங்கிய ஒரு பேரிடராக இந்நிகழ்வு பதியப்பட்டுள்ளது.