/tamil-ie/media/media_files/uploads/2020/08/a92-1.jpg)
A man in hong kong caught covid19 for a second time : கொரோனாவிலிருந்து மீண்ட நபருக்கு நான்கு மாதங்களுக்கு பிறகு மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ஹாங்காங்கை சேட்ந்த நபர் மீண்டும் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஹாங்காங் பல்கலைக்கழகம் உறுதி செய்துள்ளது.
அவரது உடலில் தொற்று நோயை ஏற்படுத்திய வைரஸின் மரபணுவை மீண்டும் ஆராய்ச்சி செய்த ஹாங்காங் பல்கலைக்கழகம், முதல் முறை தொற்றினை ஏற்படுத்திய வைரஸில் இருந்து இரண்டாவது முறை தொற்றினை ஏற்படுத்திய மாற்றம் கொண்டுதள்ளதாக அறிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்படுவது மிகவும் அபூர்வமான செயல் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் படிக்க : கொரோனா வைரஸ் : தடுப்பூசி தேசியவாதம் என்றால் என்ன?
கொரோனாவில் இருந்து மீள்பவர்கள் உடலில் அந்நோய்க்கான எதிர்ப்பு சக்தி உருவாகும் என்று கூறப்பட்டது. ஆனால் அந்த எதிர்ப்பு சக்தி எவ்வளவு நாள் இருக்கும் என்பது இதுவரை யாருக்கும் தெரியாது. வைரஸ்களின் மரபணுவில் மாற்றம் ஏற்படுவதால் ஆண்டுக்கு ஒரு முறை தடுப்பூசி போட்டுக்கொள்ளும் நிலை ஏற்படும் என்று மருத்துவ நிபுணர்கள் அறிவித்துள்ளனர்.
சென்னையிலும் கூட மாநகர ஆட்சியர் பிரகாஷ், கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு மீண்டும் தொற்று ஏற்பட்டது என்று கூறினார். ஆனால் பி.சி.ஆர் . சோதனையில், வைரசின் இறந்த செல்கள் இருந்தாலும் கூட அது கொரோனா பாசிடிவ் என்று காட்டும் என்று கூறப்பட்டது. எனவே முறையாக தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படும் வரை முக கவசம் மற்றும் சமூக இடைவெளி போன்றவற்றை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.