உலகின் பல்வேறு பகுதிகளில் மக்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தலைவர்கள் பலரும் இந்நோய்க்கு ஆளாகி வருவது குறிப்பிடத்தக்கது. பலரும் முறையான சிகிச்சை மற்றும் தனிமைப்படுத்தல் மூலம் தங்களை இந்த நோய் தொற்றில் இருந்து விடுபடுகின்றனர்.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரெம்ப் மற்றும் அவருடைய மனைவி மெலனியா ட்ரெம்ப் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார் டொனால்ட் ட்ரெம்ப். இனி வரும் நாட்களில் அவர்கள் இருவரும் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள இருப்பதாகவும் கூறியுள்ளார். நவம்பர் 3ம் தேதி அன்று நடைபெற இருக்கும் அதிபர் தேர்தலுக்காக பிரச்சாரத்தில் அவர் ஈடுபட்டு வந்தார். இதற்கு முன்பு இங்கிலாந்து பிரதமர் போரீஸ் ஜான்சன் உள்ளிட்ட முக்கியமான உலக தலைவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
To read this article in English
செவ்வாய்க் கிழமை நடைபெற்ற அதிபர் தேர்தலுக்கான விவாதத்தில் பங்கேற்க ட்ரெம்ப் மற்றும் மெலனியாவுடன் அவர்களுக்கு மிகவும் நெருங்கிய வட்டத்தை சேர்ந்த ஹோப் ஹிக்ஸும் க்ளீவ்லேண்டிற்கு பயணம் செய்தனர். ஹோப் ஹிக்ஸூக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் ட்ரெம்ப் மற்றும் மெலனியா தங்களை தனிமைப்படுத்திக் கொண்டனர் என்பது தெரியவந்துள்ளது.
மேலும் படிக்க : கொரோனா தடுப்பு மருந்துக்கு தேவைப்படும் சுறாக்கள்; 5 லட்சம் டார்கெட்!