Answer is no Michelle Obama didnt want Barack to run for President : அமெரிக்காவின் அதிபராக பதவி வகித்த காலத்தில் நடந்த நிகழ்வுகளை தொகுத்து எழுதியுள்ளார் முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா. ”இன் ஏ ப்ரோமிஸ்ட் லேண்ட்” (‘In A Promised Land’) என்ற பெயரில் வெளியாக உள்ள அந்த புத்தகத்தில், தன்னுடைய அதிபர் பதவி குறித்து தன் மனைவி மிச்சேலின் கருத்து என்ன என்பதை பதிவு செய்துள்ளார். அதில் “என்னுடைய பதில் வேண்டாம். வேண்டாம் பாரக். நீங்கள் அதிபராக இந்நாட்டை நடத்துவதில் எனக்கு விருப்பம் இல்லை” என்று 2008ம் ஆண்டு கூறியதாக குறிப்பிட்டுள்ளார்.
குடும்ப பொறுப்பில் தன்னுடைய பங்கினை இந்த பதவி பாதிக்கும் என்று மிச்சேல் வருந்தியதாக சி.பி.எஸ். நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்க காங்கிரஸிலும் செனேட்டாகவும் பதவி வகிக்க ஏற்கனவே அதிக காலம் நான் எடுத்துவிட்டேன். என்னுடைய இரண்டு குழந்தைகள் மிகவும் சிறியவர்கள். மிச்சேல் அப்போது வேலை பார்த்துக் கொண்டிருந்தார் என்று ஒபாமா தன்னுடைய நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.
மேலும் படிக்க : சாதனை படைத்த க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி!
பிறகு என்னுடைய முடிவில் அவர் குறுக்கே நிற்க விரும்பவில்லை. மாறாக என்னுடைய பயணம் முழுவதும் உடன் இருந்து ஆதரவு தந்தார். நான் அதற்காக நான் நன்றி கூறிக் கொள்கிறேன் என்று ஒபாமா கூறியுள்ளார். மிச்சேல் ஒபாமாவின் நினைவுக்குறிப்பான பிகம்மிங் (Becoming) 2018 -ம் ஆண்டு வெளியானது. தற்போது வெளியாக இருக்கும் ஒபாமாவின் மெமோயர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக தற்போது உள்ளது. ஒப்மாவின் இந்த 768 பக்க புத்தகம் செவ்வாய் கிழமையில் இருந்து விற்பனைக்கு வர உள்ளது. இதில் இரண்டு பாகங்கள் உள்ளன. இரண்டும் 2009 முதல் 2017ம் ஆண்டு காலகட்டத்திற்கு இடைப்பட்டது. முதல் தொகுதி 2011ம் ஆண்டு ஒசாமா பின்லேடனின் முடிவு வரையிலும் இரண்டாம் தொகுதி ஏனைய நாட்கள் குறித்தும் விவரிக்கிறது.
தி அடாசிட்டி ஆஃப் ஹோப் (The Audacity of Hope) மற்றும் ட்ரீம்ஸ் ஃப்ரம் மை ஃபாதர் (Dreams from my father) என்ற இரண்டு புத்தகங்களுக்கு பிறகு தற்போது மூன்றாவதாக இந்த புத்தகம் வெளியாக உள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil