Anti-govt protesters in Sri Lanka claim they find millions of rupees inside President Rajapaksa’s house: இலங்கை அதிபர் கோட்டபய ராஜபக்சேவின் அதிகாரப்பூர்வ இல்லத்தை முற்றுகையிட்ட இலங்கை அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள், ஞாயிற்றுக்கிழமை ஊடக அறிக்கையின்படி, அவரது மாளிகையில் இருந்த மில்லியன் கணக்கான ரூபாயை மீட்டதாக கூறியுள்ளனர்.
கண்டெடுக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளை போராட்டக்காரர்கள் எண்ணும் வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. மீட்கப்பட்ட பணம் பாதுகாப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக டெய்லி மிரர் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இதையும் படியுங்கள்: இலங்கை அதிபருக்கு எதிராக போராட்டம்; முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் ஆதரவு
உரிய உண்மைகளை ஆராய்ந்த பின்னர் கள நிலைமையை அறிவிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சனிக்கிழமையன்று நூற்றுக்கணக்கான அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மத்திய கொழும்பின் உயர்பாதுகாப்பு கோட்டைப் பகுதியில் உள்ள ராஜபக்சேவின் இல்லத்திற்குள் நுழைந்து, தடைகளை உடைத்து, இலங்கையின் சமீபத்திய மோசமான பொருளாதார நெருக்கடிக்காக கோட்டபய ராஜபக்சேவை ராஜினாமா செய்யுமாறு கோரினர். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவின் தனிப்பட்ட இல்லத்திற்குள் நுழைந்த மற்றொரு ஆர்ப்பாட்டக்காரர்கள் அதனை தீயிட்டு கொளுத்தினர்.
அதிபர் கோட்டபய ராஜபக்சேவின் இருப்பிடம் இன்னும் தெரியவில்லை. போராட்டக்காரர்கள் நகருக்குள் நுழைந்ததில் இருந்து வெளியில் அவரது ஒரேயொரு தகவல் தொடர்பு பாராளுமன்ற சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவுடன் இருந்தது, அவர் புதன்கிழமை இரவு அதிபர் பதவி விலகுவார் என்று அறிவித்தார்.
சனிக்கிழமை மாலை நடைபெற்ற அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தைத் தொடர்ந்து சபாநாயகர் அபேவர்தன பதவி விலகுமாறு அதிபர் கோட்டபய ராஜபக்சேவுக்கு கடிதம் எழுதியதையடுத்து, அதிபர் கோட்டபய ராஜபக்சே இந்த முடிவை அறிவித்தார்.
அதிபர் மற்றும் பிரதமர் இருவரும் இல்லாத பட்சத்தில் சபாநாயகர் தற்காலிக அதிபராக செயல்படுவார். பின்னர், புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கு எம்.பி.க்கள் மத்தியில் தேர்தல் நடக்க வேண்டும். பிரதமர் விக்கிரமசிங்கேவும் பதவி விலக முன்வந்துள்ளார்.
மே மாதம், அதிபர் கோட்டபய ராஜபக்சேவின் மூத்த சகோதரரும், பிரதமருமான மஹிந்த ராஜபக்சே, பெரிய அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்களை எதிர்கொண்டு பதவி விலக வேண்டியிருந்தது.
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான உள்நாட்டுப் போரில் வெற்றி பெற்றதற்காக ராஜபக்சே சகோதரர்களான, மகிந்த மற்றும் கோட்டபய ஆகியோர் ஹீரோக்களாகப் போற்றப்பட்டனர், ஆனால் அவர்கள் இப்போது நாட்டின் மோசமான பொருளாதார நெருக்கடிக்கு காரணம் என்று குற்றம் சாட்டப்படுகிறார்கள்.
புதன்கிழமை எதிர்ப்பார்க்கப்படும் அதிபர் கோட்டபய ராஜபக்சேவின் ராஜினாமா மற்றும் மே மாதம் மஹிந்த ராஜபக்சேவின் பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா ஆகியவை ஒரு தசாப்தத்திற்கும் மேலாக இலங்கை அரசியலில் ஆதிக்கம் செலுத்திய ஒரு சக்திவாய்ந்த குடும்பத்தின் வியத்தகு வீழ்ச்சியாகும்.
22 மில்லியன் மக்களைக் கொண்ட நாடான இலங்கை, முன்னெப்போதும் இல்லாத பொருளாதாரக் கொந்தளிப்பின் பிடியில் உள்ளது, ஏழு தசாப்தங்களில் இல்லாத மோசமான, அந்நியச் செலாவணியின் கடுமையான பற்றாக்குறையால் முடக்கப்பட்டுள்ளது, இதனால் அத்தியாவசியமான எரிபொருள் மற்றும் பிற அத்தியாவசிய இறக்குமதிகளுக்கு பணம் செலுத்த முடியாமல் திணறுகிறது. .
வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்தாததால் கடுமையான வெளிநாட்டு நாணய நெருக்கடியுடன், 2026 ஆம் ஆண்டுக்குள் செலுத்த வேண்டிய சுமார் 25 பில்லியன் அமெரிக்க டாலர்களில் இந்த ஆண்டுக்கான கிட்டத்தட்ட 7 பில்லியன் அமெரிக்க டாலர் வெளிநாட்டுக் கடனை நிறுத்தி வைப்பதாக ஏப்ரல் மாதம் அறிவித்தது.
இலங்கையின் மொத்த வெளிநாட்டுக் கடன் 51 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.