Advertisment

வீட்டுக்குள் இருந்தால் நோய் தொற்று குறையுமா? WHO இயக்குநர் எச்சரிக்கை

நாளுக்கு நாள் அதிகரிக்கும் தொற்று நோயின் வீரியத்தால் மக்கள் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகி வருகின்றனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
வீட்டுக்குள் இருந்தால் நோய் தொற்று குறையுமா?   WHO இயக்குநர் எச்சரிக்கை

Asking people to inside will not extinguish epidemics says WHO director general Tedros Adhanom Ghebreyesus : உலக நாடுகள் முழுவதும் கொரோனாவுக்கு எதிராக வலிமையான போராட்டத்தை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கொரோனாவின் பரவலை தடுக்க இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உலக மக்கள் தொகையில் 5-ல் ஒரு பங்கினர் தங்களின் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர்.  21 நாட்களுக்கு பிறகு இந்நிலை சரியாகலாம் என்று பலரும் கூறி வருகின்ற நிலையில் உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் அதிர்ச்சி அளிக்கும் செய்தி ஒன்றை அளித்துள்ளார்.

Advertisment

மேலும் படிக்க : சராசரியாக ஒரு கொரோனா நோயாளியால் எத்தனை பேருக்கு இந்த நோயை பரப்ப முடியும்?

உலகம் முழுவதும் பரவி வரும் பெரும் கொள்ளை நோயாக கொரோனா வைரஸ் அறிவிக்கப்பட்ட நிலையில், தினமும் கொரோனா பரவல் குறித்து உலக சுகாதார மையத்தின் தலைவர்கள் யாரேனும் ஒருவர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுவது வழக்கம். இன்று அதிகாலை செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய உலக சுகாதர மையத்தின் இயக்குனர் டெத்ரோஸ் ஆதானோம் கெப்ரெயெசஸ் “மக்களை வீடுகளில் இருக்க சொல்லுதல், பொதுமக்கள் நடமாட்டங்களை குறைத்தல் என்பது மருத்துவ துறை மீது விழும் அளவுக்கு அதிகமான அழுத்தங்களை குறைப்பதற்கு மட்டுமே வழி வகை செய்யும். ஆனால் இந்த நடவடிக்கைகள் கொரோனாவை அழிக்க உதவாது என்று எச்சரிக்கை செய்துள்ளார்.

ஜெனிவாவில் இன்று காலை நடைபெற்ற காணொளி காட்சி செய்தியாளர் சந்திப்பில் இத்தகைய தகவல்களை அளித்துள்ளார் அவர். இந்தியாவில் இருக்கும் மக்கள் அனைவரும் வீட்டில் இருக்க வேண்டும் என்றும், தேவையான பொருட்களை வாங்க மட்டுமே மக்கள் வெளியே வர வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் அதிகரிக்கும் தொற்று நோயின் வீரியத்தால் மக்கள் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகி வருகின்றனர்.

மேலும் படிக்க : உலகிற்கே வழிகாட்டிய இந்தியாவால் கொரோனாவை ஒழிக்க முடியும்… ஆனால்?

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Coronavirus Corona Corona Virus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment