Advertisment

”கொரோனா நெகட்டிவ்” போலியான முடிவுகளை தந்த டாக்டர் கைது!

அந்த மருத்துவரை இந்திய வங்கதேச எல்லையில் 9 நாள் தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு அந்நாட்டு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Bangladesh hospital owner faked thousands of virus results

Bangladesh hospital owner faked thousands of virus results : கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு வரும் நோயாளிகளுக்கு நெகடிவ் ரிப்போர்ட் வழங்கியுள்ளார். வங்க தேசத்தை சேர்ந்தவர் மருத்துவர் முகமது ஷஹீத். தனியார் மருத்துவமனை ஒன்றின் இயக்குநராக பணியாற்றும் அவர் தன்னிடம் பரிசோதனைக்கு வரும் நோயாளிகளிடம் இருந்து மாதிரிகளை பெற்று சோதனைக்கு உட்படுத்தாமலே நெகடிவ் என்று ரிப்போர்ட் கொடுத்துள்ளார். மருத்துவமனை சார்பில் கொரோனாவைரஸ் அறிகுறியுடன் வருபவர்களுக்கு இலவசமாக சோதனை செய்கிறோம் என்று கூறி சிறப்பு அனுமதியும் வாங்கியிருந்தது இந்த மருத்துவமனை.

Advertisment

மேலும் படிக்க : இறந்தவர் உடலை பெற 8 லட்சமா? மருத்துவமனைக்கு பாடம் புகட்டிய சிவசேனா தலைவர்

ஆனால் நோயாளிகளிடம் இருந்து சோதனைக்கான பணத்தையும் அவர் வாங்கியுள்ளார். ஆயிர கணக்கானோர்களிடம் பணத்தை வாங்கிக் கொண்டு போலியாக நெகடிவ் ரிப்போர்களை வழங்கியுள்ளார். நாளுக்கு நாள் கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் இதுவரை 10 ஆயிரம் நபர்களுக்கு அங்கு சோதனை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதில் 4000 பேருக்கு முறையாக சோதனை செய்தும், பரிசோதனையே இல்லாமல் 6 பேருக்கும் நெகடிவ் சான்றிதழ் வழங்கியது அம்பலமாகியுள்ளது. இந்த விவகாரம் வெளியானவுடன் தலைமறைவான அந்த மருத்துவரை இந்திய வங்கதேச எல்லையில் 9 நாள் தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு அந்நாட்டு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Coronavirus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment