Advertisment

100-வது பிறந்த நாள் : மருத்துவ ஊழியர்களுக்காக 100 அடி ”வாக்கிங்”... ரூ. 100 கோடி நிதி உதவி

இரண்டாம் உலக போரின் போது நாட்டுக்காக போரில் பங்கேற்ற தாத்தா தற்போது நாட்டின் மருத்துவ பணியாளர்களுக்கு உதவி வருகிறார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Captain Tom Moore, WWII veteran raised 12 million euro for NHS

Captain Tom Moore, WWII veteran raised 12 million euro for NHS

Captain Tom Moore, WWII veteran raised 12 million euro for NHS : கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உயிரை பணயம் வைத்து மருத்துவ சிகிச்சைகள் அளித்து வருகின்றனர் மருத்துவர்கள். அவர்களுக்கு போதுமான பாதுகாப்பு கவசங்கள், உடைகள்  போன்றவற்றில் உலக அளவு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. போதுமான தயாரிப்புகளும், ஸ்டாக்குகளும் இல்லாதல் இந்நிலை உருவாகியுள்ளது.

Advertisment

இவர்களுக்கு உதவும் பொருட்டு, இங்கிலாந்து நாட்டின் முன்னாள் ராணுவ வீரர்,  கேப்டன் டாம் முர்ரே தன்னால் இயன்ற அளவு நிதியை திரட்ட முன்வந்துள்ளார். இவருக்கு வயது எவ்வளவு என்று கேட்காதீர்கள். வருகின்ற 30ம் தேதி முடிந்தால் இவருக்கு வயது 100. இந்த ராணுவ தாத்தா இரண்டாம் உலகப் போரில் கேப்டனாக நாட்டுக்காக பணியாற்றியவர்.

மேலும் படிக்க : ”மீண்டும் வீட்டுக்கு வரவேண்டும்”… மகளின் ஆசையை நிறைவேற்றாத மருத்துவரின் இறுதி குறுஞ்செய்தி!

தன்னுடைய 100வது பிறந்த நாளை முன்னிட்டு 100 லேப்கள் (25 மீட்டர்)  நடக்க சவால் விடுத்து, அதன் மூலம் நிதி திரட்டி உள்ளார். இன்றும் நாட்டு மருத்துவ பணியாளர்களுக்காக களத்தில் இறங்கி தள்ளாத வயதில் 100 அடிகளை நடந்து சாதனை புரிந்துள்ளார். இந்த வகை முயற்சியில் அவருக்கு கிடைத்தது 12 மில்லியன் யூரோ. இந்திய மதிப்பில் இது ரூ. 100 கோடி ஆகும். இந்த தள்ளாத வயதிலும் தந்நாட்டு மக்களின், சுகாதாரத்துறை ஊழியர்களின் நலனுக்காக போராடிய இவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”.

இவரின் இந்த முயற்சியை பார்த்து வியப்படைந்த 6 லட்சத்தி 40 ஆயிரம் நபர்கள் இவருக்கு நன்கொடை அளித்துள்ளனர். இது குறித்து அவர் பேசிய போது, இது போன்ற இக்கட்டான சூழலில் நான் உதவுவேன் என்று நினைத்தும் பார்க்கவில்லை என்று இறுதி எட்டு எடுத்து வைக்கும் போது அவர் கூறினார்.

Coronavirus England
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment