China Wuhan records zero corona cases last week : கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் தீவிரமாக பரவி வருகிறது.இந்நோயின் தாக்குதலுக்கு 30 லட்சம் பேர் ஆளாகியுள்ளனர். பலி எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது.கொரோனா வைரஸ் முதல் முறையாக கண்டுப்பிடிகப்பட்ட இடமான வுஹான் நகரில் தற்போது கொரோனா வைரஸ் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டது என சீன நிர்வாகம் அறிவித்துள்ளது.
Advertisment
ஹுபேய் மாகாணத்தில் அமைந்திருக்கும் இந்நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. சீன புத்தாண்டு போது இந்நகரில் இருந்து ஆயிரக்கணக்கானோர் தங்களின் சொந்த கிராமங்களை நோக்கி செல்ல,அந்நாடு முழுவதும் கொரோனா தீவிரமாக பரவ துவங்கியது.
சீனாவில் இந்நோய்க்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 82830.பலியானவர்களின் எண்ணிக்கை 4633.நான்கு மாதங்களாக முழுமையான ஊரடங்கில் இருந்த வுஹான் கடந்த மாதம் இயல்பு நிலைக்கு திரும்பியது தற்போது அந்நகரில் ஒருவருக்கு கூட கொரோனா நோய் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
இந்நோயின் தீவிரத்தை உணர்ந்த சீன அரசு, வெளி மாகாணங்களில் இருந்து மருத்துவர்களையும், மருத்துவ பணியாளர்களையும் வுஹானுக்கு வரவழைத்தது. கடுமையான ஊரடங்கு உத்தரவுகள் பின்பற்றப்பட்டன. தற்காலிக மருத்துவமனைகள், ட்ரோன் கண்காணிப்பு மூலம் நோய் பரவலை கட்டுக்குள் கொண்டுவந்தது சீன அரசு.