கொரோனாவை விட கொடிய நோய்… பெரும் பாதிப்பை சந்திக்க காத்திருக்கும் ஆசிய நாடுகள்?

கொரோனாவின் பாதிப்போடு இதனை ஒப்பிடுகையில் இந்நோய் பரவும் வீதம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

By: July 10, 2020, 2:51:37 PM

‘unknown pneumonia’ in Kazakhstan :  உலகம் முழுவதும் கொரோனா நோய் தீவிரமாக பரவி வருகின்றதால், இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடக்கப்பட்ட நிலையில் உலக மக்கள் தவித்து வருகின்றனர். தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இருப்பினும் அனைத்து தரப்பினருக்குமான பயன்பாட்டிற்கு வர ஒரு வருடத்திற்கும் மேல் ஆகலாம். இந்நிலையில் கஜகஸ்தானில் கொரோனாவை விட கொடிய நோய் ஒன்று பரவுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க : கோவையில் பாதுகாப்பு கவச உடையை தூக்கிச் செல்லும் நாய்… இதில் என்ன இத்தனை அலட்சியம்?

கஜகஸ்தானில் இருக்கும் சீன தூதரகம், அவசிய காரணம் ஏதுமின்றி வீட்டில் இருந்து வெளியே செல்ல வேண்டாம் என்று கஜகஸ்தானில் வசிக்கும் சீனர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.இன்னும் வகைமைப்படுத்தபடாத நிம்மோனியா நோயால் கடந்த 6 மாதத்தில் மட்டும் 1,772 நபர்கள் உயிரிழந்துள்ளனர் என்று சீன தூதரகம் அறிவித்துள்ளது. கடந்த மாதம் 628 பேர் இந்நோயால் பலியாகியுள்ளனர். கொரோனாவின் பாதிப்போடு இதனை ஒப்பிடுகையில் இந்நோய் பரவும் வீதம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கஜகஸ்தான் நாட்டு அதிபர் காசிம் ஜோமர்த் டொக்காயேவ் (Kassym-Jomart Tokayev) கஜகஸ்தான் நாட்டு அதிபர் காசிம் ஜோமர்த் டொக்காயேவ் (Kassym-Jomart Tokayev)

இந்நிலையில் நேற்று நாட்டு மக்களிடம் உரையாடிய கஜகஸ்தான் நாட்டு அதிபர் காசிம் ஜோமர்த் டொக்காயேவ் (Kassym-Jomart Tokayev) ஜுலை 13ம் தேதி தேசிய அஞ்சலி நாளை அறிவித்துள்ளார். அந்நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அந்நாள் கடைபிடிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the International News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Chinese officials warn of unknown pneumonia in kazakhstan that is deadlier than coronavirus

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X