Advertisment

தெருக்களில் கேட்பதெல்லாம் ஆம்புலன்ஸ் சத்தம் மட்டுமே! உறைந்திருக்கும் இத்தாலி

ஸ்பெய்ன் மற்றும் சீனாவில் உயிரிழந்தவர்களின் கூட்டு எண்ணிக்கையை விட பலமடங்கு உயிர்களை இழந்துள்ளது இத்தாலி

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
corona outbreak italy records more deaths than combined toll of China and Spain

corona outbreak italy records more deaths than combined toll of China and Spain

Corona outbreak Italy records more deaths than combined toll of China and Spain : உலக அளவில் கொரோனாவிற்கு அதிக அளவில் இத்தாலியர்கள் பலியாகி வருகின்றனர். இத்தாலியின் முக்கிய மாகாணமான பெர்கமோவில் (Bergamo) ஆயிரக்கணக்கானோர் பலியாகியுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் உண்மை நிலவரமோ இதை விட அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment

மேலும் படிக்க : வணக்கம் சொல்வதில் பெருமை என்ன? கைகளை கழுவுவதில் சோம்பேறி நாடு இந்தியா

கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் நபர்களை வீட்டில் இருந்து மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் பொறுப்பினை செய்து வருகிறது செஞ்சிலுவைச் சங்கம். ஆக்ஸிஜன் சிலிண்டர்களோடு, வீட்டுக்குள் வந்து நோய்வாய்ப்பட்டவர்களை அழைத்துச் செல்கின்றனர் அவர்கள். அவர்களுக்கு நோய் தொற்றின் தாக்கம் அதிகமாக இருக்கலாம்.

தனியார் வார்டுகள் போதுமான அளவு இல்லாமல் இருப்பதால் மருத்துவமனை வளாகத்தில் மக்கள் படுக்க வைக்கப்பட்டுள்ளனர். இதனால் சுகாதாரத்துறையில் பணியாற்றும் நபர்களுக்கு அதிக அளவில் கொரோனா தொற்று ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

உயிரிழந்தவர்களின் உடல்களை அகற்ற ராணுவத்தினரை பணிக்கு அமர்த்தியுள்ளது இத்தாலி. இதுவரையில் இந்த நோய்க்கு இத்தாலியில் மட்டும் 9134 நபர்கள் பலியாகியுள்ளனர். இது ஸ்பெய்ன் மற்றும் சீனாவில் உயிரிழந்தவர்களின் கூட்டு எண்ணிக்கையை விட பலமடங்கு அதிகம்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்"  

இத்தாலியில் அதிக வசதியுடன் வாழும் நபர்களின் இருப்பிடமாக இருக்கிறது பெர்கமோ. ஆனால் தற்போது மக்கள் உணவும், மருந்து பொருட்களையும் வாங்குவதை தவிர வேறெதற்கும் வெளியே வருவதே இல்லை. உலகப் போரினை மீண்டும் நினைவுப்படுத்துகிறது ஆம்புலன்ஸின் சத்தம் என்று அவ்வூர்வாசிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

லம்போர்டி பகுதியில் இருக்கும் பெர்காமோவில் இருந்து சாம்பியன்ஸ் லீக் ஃபுட்பால் கேமை பார்க்க 10 லட்சம் நபர்கள் சென்றுள்ளனர். அந்த போட்டிகள் தான் இப்படி அளவுக்கு அதிகமான கொரோனா நோய் தொற்றினை உருவாக்க காரணமாக அமைந்துள்ளது என்று பெர்காமோ மாகாண மேயர் கியார்ஜியோ கோரி அறிவித்துள்ளார்.

மேலும் படிக்க : வாழ்வின் பெரிய அச்சுறுத்தலை சமாளிப்போம்: மோடி நடவடிக்கைக்கு ஐ.நா ஆதரவு

Coronavirus Corona Italy
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment