கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. சீனாவில் இருந்து பரவ தொடங்கிய இந்த கொடிய வைரஸ் உலகம் முழுவதும் உயிர்பலி வாங்கி வருகிறது.
இந்தியாவில் கொரோனா வைரஸால் இதுவரை 126 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் பாதிப்பு: கோழி கறி சாப்பிடுவது பாதுகாப்பானதா?
மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஈரானில் கொரோனா வைரஸின் தாக்கம் மிகவும் அதிகமாக உள்ளது. ஈரானில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 988 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று ஒரு நாளில் மட்டும் 135 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 16,169 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ஈரானுடன் சுமார் 900 கிலோ மீட்டர்கள், ஆப்கானிஸ்தானுடன் 2 ஆயிரத்து 600 கிலோ மீட்டர்கள் அளவுக்கு எல்லைகளை பகிரும் பாகிஸ்தானிலும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. நாம், இந்தியா மற்றும் பிற நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி வருவதை கூர்ந்து கவனித்து வரும் நிலையில், சப்தமே போடாமல் இந்தியாவை ஓவர்டேக் செய்து சென்றுக் கொண்டிருக்கிறது பாகிஸ்தான்.
கொரோனா தடுப்பு மருந்து கண்டறியும் ஆய்வுக் குழுவில் இந்தியர்
பாகிஸ்தானில் இதுவரை 194 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று, பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தில் முதல் கொரோனா வைரஸ் மரணம் நிகழ்ந்துள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அண்மையில் ஈரானில் இருந்து திரும்பிய அந்த நபர், ஆபத்தான நிலையில் திங்கள்கிழமை இரவு, பஞ்சாபின் லாகூரில் உள்ள மாயோ மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
நேற்று, அதாவது (மார்ச் 16) நிலவரப்படி பாகிஸ்தானில் 140 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று ஒரே நாளில் மட்டும் 54 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட எண்ணிக்கை 194 ஆக எகிறியுள்ளது.
அதுவும், பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் மட்டும் 155 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. அதிலும் சிந்து மாகாணத்தின் சுக்கார் எனும் சிறிய பகுதியில் மட்டும் 119 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் சமீபத்தில் ஈரான் சென்று திரும்பி வந்ததாக gulfnews.com தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”