Advertisment

கொரோனா வைரஸ் மனிதர்களில் பல ஆண்டுகளாக இருந்திருக்கலாம் - ஆய்வுகள்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Coronavirus a product of evolution, may have been in humans for years Study

Coronavirus a product of evolution, may have been in humans for years Study

கொரோனா வைரஸ் தொற்று தொடர்ந்து பரவி வருவதன் காரணமாக, உலகளவில் மில்லியன் கணக்கானவர்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், விஞ்ஞானிகள் குழு கோவிட் -19 வைரஸ் மனிதர்களிடையே பல ஆண்டுகளுக்கு முன்பே அல்லது இன்றைய சூழலுக்கு பல தசாப்தங்களுக்கு முன்பே பரவியிருக்கக் கூடும் என்பதைக் கண்டுபிடித்தது.

Advertisment

நேச்சர் மெடிசின் இதழில் வெளியிடப்பட்ட கண்டுபிடிப்புகளின்படி, சீனாவின் வுஹான் மாகாணத்தில் இந்த வைரஸ் முதன்முதலில் கண்டறியப்படுவதற்கு முன்பே விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உண்மையில், இது ஒரு தசாப்த காலம் வரை இருந்திருக்கலாம் என்ற ஊகங்கள் உள்ளன.

ஆஸ்திரேலியா, பிரிட்டன் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த சர்வதேச விஞ்ஞானிகள் குழு நடத்திய இந்த ஆய்வு மார்ச் 17 அன்று அறிவியல் இதழில் வெளியிடப்பட்டது.

"பின்னர், பல ஆண்டுகளாக அல்லது பல தசாப்தங்களாக படிப்படியாக பரிணாம மாற்றங்களின் விளைவாக. இந்த வைரஸ் இறுதியில் மனிதரிடமிருந்து மனிதனுக்கு பரவி தீவிரமான, பெரும்பாலும் உயிருக்கு ஆபத்தான நோயை உருவாக்கும் திறனைப் பெற்றது" என்று அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் பிரான்சிஸ் காலின்ஸ் நிறுவனத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையில் தெரிவித்தார்.

முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு பங்களிக்க விருப்பமா? - ஸ்டெப்ஸ் இதோ

கலிஃபோர்னியாவில் உள்ள ஸ்க்ரிப்ஸ் ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த கிறிஸ்டியன் ஆண்டர்சன், ஸ்காட்லாந்தில் உள்ள எடின்பர்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆண்ட்ரூ ரம்பாட், நியூயார்க்கில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இயன் லிப்கின், சிட்னி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த எட்வர்ட் ஹோம்ஸ் மற்றும் புதிய ஆர்லேன்சில் உள்ள துலேன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ராபர்ட் கேரி ஆகியோர் இந்த ஆய்வை நடத்தினர்.

"இந்த கொரோனா வைரஸ் மரபணு வரிசை தரவுகளை ஒப்பிடுவதன் மூலம், SARS-CoV-2 இயற்கையான செயல்முறைகள் மூலமாக உருவானது என்பதை நாம் உறுதியாக தீர்மானிக்க முடியும்" என்று முன்னணி ஆராய்ச்சியாளர் கிறிஸ்டியன் ஆண்டர்சன் கூறினார்.

publive-image

அவர்களைத் தவிர, இத்தாலிய பேராசிரியர் கியூசெப் ரெமுஸி கடந்த நவம்பரிலிருந்து இத்தாலியில் “விசித்திரமான நிமோனியாக்கள்” குறித்து சுட்டிக்காட்டியிருந்தார். இது இத்தாலியில் தற்போது பேரிழப்பை ஏற்படுத்தி இருக்கும் கோவிட் -19 வைரஸ், அதைப் பற்றி யாருக்கும் தெரியுமுன் ஐரோப்பாவை அடைந்திருக்கலாம்.

மிலனில் உள்ள மரியோ நெக்ரி இன்ஸ்டிடியூட் ஆப் மருந்தியல் ஆராய்ச்சியின் இயக்குனர் பேராசிரியர் ரெமுஸி கூறுகையில், "நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நிமோனியாவின் அசாதாரண வழக்குகள், வுஹான் நகரம் தலைப்புச் செய்திகளை வெளியிடுவதற்கு முன்பு, இத்தாலியின் மோசமான பாதிப்புக்குள்ளான லோம்பார்டியில் ஏற்கனவே வைரஸ் பரவி வருவதாக அர்த்தம்" என்று அவர் கூறினார்.

ஊரடங்கு இங்கே கல்வியை முடக்கவில்லை: சல்யூட் டூ சயின்ஸ் டீச்சர் மேரி சுபா

இதே கருத்தை அமோதித்து பேசிய சீன மருத்துவர், பெய்ஜிங்கில் கோவிட் -19 நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து வருகிறார், கடந்த ஆண்டு பல நாடுகளில் உள்ள சுகாதார நிபுணர்களால் மர்மமான நிமோனியா பரவலால் ஏராளமான பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

"முழு விஷயமும் ஒரு நாள் வெளிச்சத்திற்கு வரும்" என்கிறார் அந்த பெயர் தெரிவிக்க விரும்பாத சீன மருத்துவர்.

publive-image

வுஹானில் உள்ள டாக்டர்களும் டிசம்பரில் நிமோனியா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதைக் கவனித்தனர். காய்ச்சல் மற்றும் பிற நோய்க்கிருமிகளுக்கான சோதனைகள் எதிர்மறையாக திரும்பின.

தொற்றுநோய் பரவிய சிறிது நேரத்திலேயே, சீன விஞ்ஞானிகள் SARS-CoV-2 இன் மரபணுவை வரிசைப்படுத்தி, தரவை உலகளவில் ஆராய்ச்சியாளர்களுக்குக் கிடைக்கச் செய்தனர். இதன் விளைவாக வந்த மரபணு வரிசை தரவு மூலம், சீன அதிகாரிகள் உடனடியாக தொற்றுநோயைக் கண்டறிந்ததாகவும், மனித மக்கள்தொகையில் ஒருவருக்கு தொற்று ஏற்பட்ட பிறகு, மனிதர்களுக்கு இடையே பரவும் பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் காட்டியது.

ஷி ஜெங்லி தலைமையிலான வுஹான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி குழு சீனா-மியான்மர் எல்லைக்கு அருகிலுள்ள ஒரு மலை குகையில் கண்டெடுக்கப்பட்ட ஒரு பேட் வைரஸ் தான் இதன் தோன்றல் இடம் என்பதை கண்டறிந்தனர்..

இந்த வைரஸ் இப்போது உலகின் ஒவ்வொரு மூலையிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Corona
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment