உலக அளவில் கொரோனா வைரஸ் மிகப் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. ஆனால் இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் உலக நாடுகள் செயல்படவில்லை என்று கவலை தெரிவித்துள்ளது உலக சுகாதார அமைப்பு. இது தொடர்பாக நேற்று பேசிய அவர் “கொரோனா வைரஸ் பாதிப்புகள் மிகவும் மோசமான நிலையை எட்ட வாய்ப்புகள் இருப்பதாக கூறினார்.
Advertisment
மேலும் கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியில் உலக நாடுகள் பலவும் தவறான திசையில் பயணித்துக் கொண்டிருக்கின்றன. உலக மக்களின் மோசமான எதிரியாக கொரோனா உருவெடுத்துள்ளது. எனவே உலக நாடுகள் விரிவான யுக்திகளை கையாள வேண்டும். இல்லையெனில் உலகம் இயல்பு நிலைக்கு திரும்பாது என்றும் அவர் கூறியுள்ளார்.
அமெரிக்காவில் அதிக அளவில் கொரோனா தொற்றுகள் ஒவ்வொரு நாளும் பதிவாகி வருகிறது. சுகாதாரம் சார்ந்த நடவடிக்கைகளுக்கு அதிக முக்கியத்துவம் நாம் தர வேண்டும். இல்லையென்றால் மக்கள் அழிவை தடுக்க இயலாது என்று கூறிய அவர் ஒவ்வொரு நாடும் கொரோனா பரவலை தடுக்கவும், உயிர்களை காப்பாற்றவும் விரிவான திட்டத்தை வகுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவித்தார்.
தற்போது சமூக இடைவெளி, கைகளை கழுவுதல், முகக்கவசம் அணிதல் மற்றும் தனிமைப்படுத்தல் மட்டும் தான் தீர்வு என்றும் அவர் எச்சரிக்கை செய்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil