Advertisment

உலகளவில் 3 லட்சம் பேரை பலி வாங்கிய கொரோனா

உலகம் முழுவதும் 41 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 14 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Covid 19 global death toll

Covid 19 global death toll

உலக அளவில் கரோனா வைரஸ் பாதிப்புக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்று லட்சத்தை நெருங்குகிறது.

Advertisment

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு திடீர் நெஞ்சுவலி : எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி

சீனாவின் வூகான் மாகாணத்தில், முதன்முதலில் பரவிய இந்த கொரோனா வைரஸ், பின்னர் மற்ற நாடுகளுக்கும் பரவியது. தற்போது ஒட்டுமொத்த உலகமும் கொரோனா வைரசால் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக அமெரிக்கா, பிரிட்டன், இத்தாலி, போன்ற நாடுகளை பெருமளவு பாதித்துள்ளது. இந்நிலையில் உலகம் முழுவதும் 41 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 14 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.

அமெரிக்காவைப் பொருத்தவரை, அங்கு கிட்டத்தட்ட 13.5 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு உயிரிழப்பு 80 ஆயிரத்தை தாண்டியுள்ளது. அதே நேரத்தில் 2.5 லட்சத்திற்கும் அதிகமானோர் குணம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக, ஸ்பெயினில் 2.62 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பிரிட்டனில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 31 ஆயிரத்து 500-ஐ கடந்துள்ள நிலையில், இத்தாலியில் 30 ஆயிரத்து 300-க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் மரணமடைந்துள்ளனர். சர்வதேச அளவில் கொரோனா பாதிப்பில் சீனா, கனடா, பெருவை அடுத்து இந்தியா தொடர்ந்து 14-வது இடத்தில் உள்ளது.

Coronavirus Live Updates : இந்தியாவில் குணமடைவோர் எண்ணிக்கை 30 சதவீதத்தை தாண்டியது

இத்தாலியில் 2,17,185 பேரும், இங்கிலாந்தில் 2,12,629 பேரும், ரஷ்யாவில் 1,87,259 நபர்களும், பிரான்சில் 1,76,079 பேரும், ஜெர்மனியில் 1,70,558 நபர்களும், பிரேசிலில் 1,46,894 பேரும், துருக்கியில் 1,35,569, ஈரானில் 1,04,691 பேரும், பாதிக்கப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. தடுப்பு மருந்து மற்றும், தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரை, தனிநபர்கள் தனிப்பட்ட சுகாதாரம், தனிமனித விலகல், ஆரோக்கியமான உணவு, உள்ளிட்டவற்றை பின்பற்றி இந்நோயை, வருமுன் காப்பதே ஒரே தீர்வு என்கிறார்கள் மருத்துவர்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Coronavirus Corona
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment