Coronavirus good news : கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் அதிக தீவிரமாக பரவி வருகிறது. இந்நிலையில் பலரும் தங்களின் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். உயிர் கொல்லியாக இருக்கின்ற பட்சத்திலும் முறையான சிகிச்சை மூலம் மக்கள் காப்பாற்றப்பட்டும் வருகின்றனர். எப்போதும் இறப்பு விகிதங்கள், பாதிப்பு விகிதங்கள் குறித்தே அதிகம் நாம் பேசி வருகின்றோம்.
தற்போது அதற்கு மாறாக நேர்மறை சிந்தனைகளை விதைக்கும் செய்தியை இன்று நாம் பார்ப்போம். உலக அளவில் 30 லட்சம் பேர் கொரோனா நோய்க்கு ஆளாகியுள்ளனர். அதே நேரத்தில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் நம்பிக்கையுடன் நோயை எதிர்த்து போராடி, வெற்றி அடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்நோயில் இருந்து குணம் அடைந்துள்ளனர். அமெரிக்காவில் 1, 55, 737 நபர்கள் குணம் அடைந்துள்ளனர். ஸ்பெயினில் 1, 37, 984 நபர்கள் குணம் அடைந்துள்ளனர். ஜெர்மனியில் 1, 26,900 பேர் குணம் அடைந்துள்ளனர். சீனாவில் மொத்தம் 77 ஆயிரத்து 642 நபர்கள் குணம் அடைந்துள்ளனர். இத்தாலியில் 76 ஆயிரம் நபர்களும், ஈரானில் 75 ஆயிரம் நபர்களும் குணம் அடைந்து வீட்டிற்கு திரும்பியுள்ளனர்.
நல்ல எண்ணங்கள் நல்ல நம்பிக்கையை தரும். நல்லதையே நினைப்போம். கொரோனாவை எதிர்த்து தைரியமாக போர் தொடுக்கும் மருத்துவத்துறை ஊழியர்களுக்கு பக்கபலமாக உடன் நிற்போம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil - இணைப்பில் இணைந்திருங்கள்.
உலக அளவில் மொத்தமாக இந்நோய்க்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 32 லட்சத்து 56 ஆயிரத்து 846. குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்து 14 ஆயிரத்து 753. உயிரிழப்புகள் 2 லட்சத்து 33 ஆயிரத்து 388.