/tamil-ie/media/media_files/uploads/2020/04/Capture-horz-1.jpg)
coronavirus Italy mafia gangs provide food to the poor by looting from shopping malls
coronavirus Italy mafia gangs provide food to the poor by looting from shopping malls : கொரோனா வைரஸால் அதிகம் பாதிப்பு அடைந்துள்ளது இத்தாலி. உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்காவிற்கு அடுத்த இடத்தில் உள்ளது இத்தாலி. கடந்த மூன்று வாரங்களில் மோசமான உயிரிழப்பை அந்நாடு சந்தித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
அங்கு உள்ள பெரியவர்களின் நிறையபேர் இந்நோய்க்கு பலியாகியுள்ளனர். அவர்களை தகனம் செய்ய, அடக்கம் செய்ய போதுமான இடம் மற்றும் ஆட்கள் இல்லை என வருத்தம் தெரிவித்து இருந்தது அந்நாடு. மற்ற நாடுகளைப் போன்றே, லாக்டவுனில் இருக்கும் இத்தாலியின் பொருளாதாரமும் பெருத்த அடிவாங்கியுள்ளது.
பொருளாதார ரீதியாக மிகவும் பாதிப்படைந்து இருக்கும் நிலையில் நேப்பிள்ச் மற்றும் பலர்மோ பகுதியில் உள்ள ஏழைகளுக்கு மாபியாக்கள் உணவு வழங்கி வருகின்றனர். அவர்கள் நேரடியாக கடைக்காரர்களை மிரட்டி உணவு பொருட்களை வாங்கிக்கொண்டு வந்து இல்லாத மக்களுக்கு வழங்கி வருகின்றனர்.
இது போன்ற நோய் தொற்றால் ஏழைகள் மற்றும் இல்லாதப்பட்ட மக்கள் தான் அதிக அளவில் இழப்பினை சந்தித்து வருகின்றனர். பசி, பஞ்சம், பட்டினி என்ற நிலை அவர்களுக்கு பழக்கமாகியிருக்கலாம். இருப்பினும் இயல்பு நிலை திரும்பி அடுத்த வேளை உணவு நிச்சயம் என்று வரும் வரை அவர்களின் நிலை மோசமாக தான் இருக்கும்.
மேலும் படிக்க : ஆட்டுக்குட்டி போல குட்டியானையை தோளில் சுமந்த வன ஊழியர் – டிரெண்டிங் ஆகும் போட்டோ
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.