Advertisment

மோசமான சூழல் நிலவும் போது இத்திட்டம் பலனளிக்குமா? இத்தாலியில் கொரோனா நிலை என்ன?

இறுதி சடங்குகளை ஊருக்கு வெளியே நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அதில் பங்கேற்க வெறும் 15 நபர்களுக்கு மட்டும் தான் அனுமதி.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
coronavirus lockdown relaxation measures announced by Italy prime minister Giuseppe Conte

coronavirus lockdown relaxation measures announced by Italy prime minister Giuseppe Conte

coronavirus lockdown relaxation measures announced by Italy prime minister Giuseppe Conte : கொரோனா நோய்க்கு உலக அளவில் அதிக பாதிப்பினை சந்தித்த ஐரோப்பிய நாடு இத்தாலி தான். நாளுக்கு நாள் அதிகரித்து வந்த கொரோனா நோய் தொற்று மற்றும் பலி எண்ணிக்கையால் முற்றிலுமாக சீரழிந்துள்ளது அந்நாடு. வீட்டிலேயே மக்கள் முடங்கியுள்ளனர். தெருக்களில் ஆம்புலன்ஸின் சத்தம் தவிர கேட்பதற்கு ஒன்றுமே இல்லை என்ற நிலை தான் உருவாகியிருந்தது.

Advertisment

மேலும் படிக்க : சாதித்து காட்டிய வுஹான்! முற்றிலுமாக கொரோனா இல்லா நிலையை எட்டியது!

இத்தாலி நாட்டில் இதுவரையில் கொரோனா வைரஸால் 1,97, 675 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 26ம் தேதி (நேற்று) மட்டும் 260 பேர் பலியாகியுள்ளனர். மொத்தமாக இந்நோய்க்கு அந்நாட்டில் பலியானவர்கள் எண்ணிக்கை 26, 644. 6 வாரங்களுக்கு பிறகு பலி எண்ணிக்கையும், நோய் தொற்றும் சற்று குறைந்துள்ளது.

இந்நிலையில் இது நாள் வரையில் இருந்த ஊரடங்கு கொஞ்சம் கொஞ்சமாக தளர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கான வழிமுறைகளையும், எப்படியாக ஊரடங்கு உத்தரவுகள் தளர்த்தப்பட உள்ளது என்றும் அந்நாட்டு பிரதமர் க்யூசெப் கோண்டே அறிவித்துள்ளார்.

மேலும் படிக்க : வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் நல்ல உடல்நலத்துடன் உள்ளார் – தென்கொரியா

தளர்த்தப்படும் ஊரடங்கு நடைமுறைகள்

கட்டுமானத்துறை, உற்பத்தித் துறை மற்றும் மொத்த விற்பனை கடைகள், மால்கள் மே 4-ம் தேதியில் இருந்து செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சில்லறை வணிகங்கள், அருங்காட்சியகம், நூலகங்கள், மற்றும் கேலரிகள் மே 18ம் தேதியில் இருந்து இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சலூன்கள், பார்கள், ப்யூட்டி பார்லர்கள் மற்றும் உணவகங்கள் ஜூன் 1ம் தேதியில் இருந்து இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. உணவகங்கள் மற்றும் பார்களில் இருந்து பார்சலுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இறுதி சடங்குகளை ஊருக்கு வெளியே நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அதில் பங்கேற்க வெறும் 15 நபர்களுக்கு மட்டும் தான் அனுமதி.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்” 

Coronavirus Italy
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment