Coronavirus outbreak: Animals takeover cities during self quarantine : கொரோனா வைரஸ் பரவலை தடுக்க உலகெங்கிலும் இருக்கும் மக்கள் தங்களின் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கி உள்ளனர். ஆனால் வனவிலங்குகள் இது தான் சமயம் என்று நினைத்து தெருக்களில் நடமாடும் துவங்கியுள்ளது. உலகின் பல்வேறு முக்கியமான நகரங்களில் காடுகளில் இருக்கும் மான்கள், காட்டு எருதுகள், குரங்குகள் போன்றவை தற்போது மனிதர்கள் அதிகம் வாழ்ந்த தெருக்களில் சாவகாசமாய் நடந்து வருகிறது. எப்போதும் போக்குவரத்து அதிகமாய் இருக்கும் ஆறுகளிலும் கூட அளவுக்கு அதிகமாக வாழும் மீன்களும் நீந்தி திரிகின்றன.
மான்கள்
ஜப்பானின் நாரா பூங்காவில் அளவுக்கு அதிகமான மான்கள் இருக்கிறது. பொதுமக்களின் நடமாட்டம் குறைந்து போகவும் மான்கள் தங்களின் விருப்பம் போல வீதிகளில் உலா வந்து கொண்டிருக்கிறது. சமீபத்தில் வீதிகளில் சுற்றித்திருந்த மான்கள், வீடுகளுக்கு முன்னாள் மக்கள் நட்டு வைத்திருக்கும் செடிகளை கடித்து தின்று கொண்டிருந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.
குரங்குகள்
தாய்லாந்து நாட்டில் குரங்குகளை எங்கு வேண்டுமானாலும் பார்க்க முடியும். ஆனால் மக்கள் முடங்கியுள்ள இந்த காலங்களில் அளவுக்கு அதிகமாக தெருக்களில் சுற்றித்திருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
மீன்களும் வாத்துகளும்
மிதவை நகரம் என்று அழைக்கப்படும் வெனிஸ் நகரில் படகு போக்குவரத்து அளவுக்கு அதிகமாக நடைபெறும். பொது இடங்களில் கூடுவதற்கு மக்களுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கின்ற இந்த காலகட்டத்தில் அந்த நீரோடைகள் மற்றும் நீர் வழித்தடங்களில் அளவுக்கு அதிகமாக மீன்களும், வாத்துகளும் நீந்தி மகிழ்ந்து வருகிறது.
சுற்றித்திரியும் வளர்ப்பு பிராணிகள்
மேய்ப்பவர்கள் மற்றும் கண்காணிப்பாளர்கள் யாரும் இல்லாத காரணத்தால் இத்தாலியின் கிராமப்புறங்களில் செம்மறி ஆடுகளும், குதிரைகளும் இஷ்டம் போல் சுற்றித்திரிகின்றது. அதே போன்று ஸ்பெயினின் பார்சிலோனாவில் காட்டுப் பன்றிகள் சுதந்திரமாக சுற்றித்திரிகின்றது.
மனிதர்களின் ஆசைகளுக்கான தீவிர செயல்பாடுகளைத் தவிர அனைத்துமே இயற்கை தான். இயற்கையை நாம் மதிக்கவில்லை என்றால், நம்மை இந்த பூவுலகில் இருந்து அனுப்பிவைத்துவிட்டு நாம் ஏற்படுத்திய காயங்களை பூமி தானாகவே சரிசெய்து கொள்ளும் என்பது தான் இந்த குவாரண்டைன் நாட்கள் நமக்கு உணர்த்தியிருக்கும் ஒன்று.
மேலும் படிக்க : கொரோனா சிகிச்சை : அமெரிக்காவில் உயில் எழுதும் டாக்டர்களின் எண்ணிக்கை உயர்வு!