Coronavirus Outbreak China donated 1.70 lakhs PPE to India : இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கொரோனா வார்டுகளில் பணியாற்றும் மருத்துவ பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவல்துறையினர் தங்களை பாதுகாத்துக் கொள்ள பாதுகாப்பு உடைகள் அதிக அளவில் தேவைப்படுகிறது. இந்தியாவில் பாதுகாப்பு உடைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்தியாவிற்கு 1.70 லட்சம் பாதுகாப்பு ஆடைகளை இலவசமாக வழங்கியுள்ளது சீனா.
இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் 1 லட்சத்து 70 ஆயிரம் முழு கவச உடைகளை(பிபிஇ) இந்தியாவுக்கு சீன அரசு வழங்கியுள்ளது. இதுமட்டுமில்லாமல் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 20 ஆயிரம் கவச உடைகள் உட்பட 1 லட்சத்து 90 ஆயிரம் உடைகள் இந்தியா முழுவதும் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. இத்துடன் நம் நாட்டில் ஏற்கனவே இருக்கும் 3,87,473 கவச உடைகளும் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
— Ministry of Health ???????? #StayHome #StaySafe (@MoHFW_INDIA) April 6, 2020
இத்துடன் 2 லட்சம் N95 மாஸ்க்குகள் அனுப்பி வைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பேக்கேஜோடு சேர்த்து இதுவரை 20 லட்சம் மாஸ்க்குகள் இந்தியாவின் பல்வேறு பக்கங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் 17 லட்சம் மாஸ்க்குகள் ஸ்டாக்கில் உள்ளது. புதிய சப்ளையாக 2 லட்சம் மாஸ்க்குகள் உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
இந்த பாதுகாப்பு கவசங்கள், உடைகள், மற்றும் மாஸ்க்குகளை, கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கும் மாநிலங்களான தமிழகம், மகாராஷ்ட்ரா, டெல்லி, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.