Advertisment

அவலக் குரல்கள், இறப்புகள் இல்லாமல் உறங்க சென்றது சீனா! கட்டுக்குள் கொரோனா...

வாரத்திற்கு ஒரு முறை மட்டும் தான் விமான சேவை நடைபெற வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது சீனா.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Coronavirus outbreak China reports zero deaths after 3 long months fight against COVID19

Coronavirus outbreak China reports zero deaths after 3 long months fight against COVID19corona virus, china, covid19, corona virus in india,coronavirus tamil news, coronavirus tamil nadu news, coronavirus chennai news, coronavirus Tamil nadu, coronavirus outbreak

Coronavirus outbreak China reports zero deaths after 3 long months fight against COVID19 : சீனாவில் கொரோனா வைரஸ் மிகவும் தீவிரமாகப் பரவி வந்தது.  கடந்த இரண்டு வாரங்களாக கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது சீனா.  மேலும் வெளிநாடுகளில் இருந்து  சீனாவிற்கு மக்கள் வருவதற்கு பல்வேறு தடைகளையும் அந்நாடு.  வெளிநாடுகளில் இருந்து வருபவர்களால் இந்நோய் மீண்டும் பரவி விட கூடாது என்பதில் அதிக அக்கறை செலுத்துகிறது அந்நாடு.

Advertisment

இந்த வைரஸால் கிட்டத்தட்ட 80 ஆயிரத்துகும் மேற்பட்டோர் சீனாவில் பாதிக்கப்பட்டனர்.  அதில் 3331 பேர் உயிரிழந்தனர். 2 மாத லாக்டவுன் காலத்தில், அழு குரல் கேட்காத வுஹான் தெருக்கள் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். தினம் தினம் நூற்றுக் கணக்கான மனிதர்கள் இந்த உலகை விட்டு சென்றனர். இழப்புகளால் மிகவும் நொந்து போன சீனாவுக்கு ஆறுதலான ஒரு விஷயம் நேற்று நடந்துள்ளது.

மேலும் படிக்க : ஆப்பிரிக்கா சோதனை கூடமா? இனவெறியுடன் நடக்காதீர்கள் – ஆராய்ச்சியாளர்களுக்கு WHO எச்சரிக்கை!

கிட்டத்தட்ட மூன்று நான்கு மாதங்கள் கழித்து, கொரோனா நோய் தொற்று யாரையும் காவு வாங்காமல் இருந்தது தான் அந்த நல்ல செய்தி. கொரோனாவால் நேற்று எந்தவித உயிரிழப்பும் ஏற்படவில்லை என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.  இந்த தகவல்கள் சீன அரசு பெரிதும் மகிழ்ச்சி அடைந்து உள்ளது.  நேற்று சீனாவில் புதிதாக 39 பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்று 32 பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

வாரத்திற்கு ஒரு முறை மட்டும் தான் விமான சேவை நடைபெற வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது சீனா. மேலும் ஒரு விமானத்தில் 75% இருப்பிடங்களுக்கு மேல் பயணிகளை ஏற்றவும் தடை விதித்துள்ளது சீனா.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

China
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment