WHO Director General Tedros Adhanom Ghebreyesus condemned the notion of testing vaccine on Africans : உலக அளவில் கொரோனா வைரஸூக்கு எதிராக தொடர் யுத்தம் நடைபெற்று வருகிறது. உலகநாடுகள் ஒருங்கிணைந்து கொரோனா வைரஸூக்கு எதிராக மருந்து கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளனர். அமெரிக்காவில் இரண்டு தடுப்பூசிகள் கண்டறியப்பட்டுள்ளது. கோவிட்19க்கு எதிராக பில்கேட்ஸ் அறக்கட்டளை இன்று ஒரு தடுப்பூசியை சோதனை செய்துள்ளது. அந்த தடுப்பூசிக்கு IN0 4800 என்று பெயரிட்டுள்ளனர். இந்த சோதனை வெற்றி அடைந்தால் இந்த வருடத்தின் முடிவுக்குள் 10 லட்சம் தடுப்பூசிகள் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிரான்ஸ் நாட்டு ஆய்வாளர்கள் இரண்டு பேர், கொரோனா வைரஸுக்கு எதிரான மருந்துகளை ஆப்பிரிக்க மக்கள் மீது செலுத்தி பரிசோதனை செய்ய வேண்டும் என்று ஆலோசனை கொடுத்துள்ளது தெரியவந்துள்ளது.
இதனை கடுமையான விமர்சனம் செய்துள்ளார் உலக சுகாதார மையத்தின் தலைவரான டெட்ரோஸ் அதானம் கெப்ரியேசஸ். எத்தியோப்பியா வம்சாவளி அவர் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர் ”ஆப்பிரிக்க மண்ணும் மக்களும் வைரஸூக்கான தடுப்பூசி மருந்துகளை பரிசோதனை செய்யும் கூடமாக செயல்படுத்துவதை அனுமதிக்க முடியாது. உலக சுகாதார அமைப்பு, ஒரு தடுப்பூசியை பரிசோதனை செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளதோ அதை மட்டும் செய்தால் போதும். ஆப்பிரிக்காவுக்கும் சரி, ஐரோப்பாவிற்கும் சரி விதிமுறைகள் என்பது ஒன்று தான். காலணிய ஆதிக்க மனப்பான்மையில் இருந்து வெளியே வாருங்கள்.
மனிதர்களை மனிதர்களாக நடத்தவும் மதிக்கவும் ஆராய்ச்சியாளர்களுக்கு தெரிந்திருக்க வேண்டும். நிறவெறியை வெளிப்படுத்தும் இடம் இதுவல்ல என்றும் எச்சரிக்கை செய்துள்ளார் அவர். 70 நாடுகளில் உள்ள 20க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கொரோனாவுக்கு மருந்து தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil