பேரழிவில் இருந்து மீண்டு வரும் வுஹான்… பெரும் முயற்சிகளுக்கு கிடைத்த வெற்றி தான்!

சீனாவில் நேற்று புதிதாக 34 நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக இந்நோயால் 80,928 பாதிக்கப்பட்டனர். 3245 நபர்கள் உயிரிழந்துள்ளனர்.

By: Updated: March 19, 2020, 04:05:21 PM

coronavirus outbreak China’s Wuhan recovering very fast : இந்த நூற்றாண்டின் இரண்டாம் பெரும் கொள்ளை நோயாக மாறியது வுஹானில் இருந்து பரவிய கொரோனாவைரஸ் கோவிட்19 (Covid19). சீன நாட்டின் ஹூபேய் மாகாணத்தில் அமைந்திருக்கும் வுஹானில் இந்நோய் வெகு தீவிரமாக பரவத் துவங்கியது. அதிக அளவில் மக்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டிய நிலை உருவானதால் 16க்கும் மேற்பட்ட தற்காலிக மருத்துவமனைகள் திறக்கப்பட்டு நோயாளிகளுக்கு இரவு பகலாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை சிகிச்சை அளித்து டையர்டான மருத்துவர்

மார்ச் மாதம் 12ம் தேதி நிலவரப்படி இறுதியாக அமைக்கப்பட்ட தற்காலிக மருத்துவமனையும் மூடப்பட்டது. ஹூபேய் மாகாணத்தில் நேற்று எந்த ஒரு புதிய கேஸூம் பதிவு செய்யப்படவில்லை. 795 நபர்கள் மருத்துவமனையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர். இந்த பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை 67,800. இதில் 3130 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”  

சீனாவில் நேற்று புதிதாக 34 நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக இந்நோயால் 80,928 பாதிக்கப்பட்டனர். 3245 நபர்கள் உயிரிழந்துள்ளனர். மருத்துவமனையில் இருந்து 70,420 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். பீப்பில்ஸ் டெய்லி என்ற சீன ஊடகத்தின் தற்போதைய அறிக்கைப்படி மொரிசியஸ் மற்றும் ஃபிஜி நாடுகளில் முதன் முறையாக கொரோனா வைரஸால் மக்கள் பாதிக்கப்படுள்ளனர். போர்ச்சுக்கல் நாட்டில் 15 நாட்களுக்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.  ஆஸ்திரேலியாவில் வெளிநாட்டினர் வருவதற்கு நாளை மாலை முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நாட்டில் 9345 நபர்கள் இந்நோய்க்கு பாதிக்கப்பட்டுள்ளனர். 150 நபர்கள் பலியாகியுள்ளனர்.

மேலும் படிக்க : கொரோனா வைரஸ் : மாணவர்களின் இருப்பிடங்களுக்கு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் “சபாஷ்” டீச்சர்கள்!

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the International News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Coronavirus outbreak chinas wuhan recovering very fast

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X