/tamil-ie/media/media_files/uploads/2020/03/Bat-meat.jpg)
Coronavirus outbreak Chinese wet markets started to function again : சீனாவின் ஹூபெய் மாகாணத்தில் இருக்கும் வுஹான் நகரில் தான் முதன் முதலாக கொரோனா வைரஸ் உருவானது. உலக நாடுகள் அனைத்தும் கொரோனா வைரஸை எதிர்த்து மாபெரும் போராட்டத்தையே நடத்தி வருகின்றனர்.
சீனா இரண்டு மாதங்கள் கடுமையான ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து கொரோனா வைரஸை கட்டுக்குள் கொண்டு வந்தது. கடந்த இரண்டு வாரங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை புதிதாக உருவாகாத நிலையில் ஹூபெய் மாகாணத்தில் இருந்த ஊரடங்கு தடை நீக்கப்பட்டது.
மேலும் படிக்க : வாழ்த்துகள் வுஹான்… மீண்டும் பொது வாழ்விற்கு உங்களை வரவேற்கிறோம்!
ஏப்ரல் 8ம் தேதி முதல் வுஹானும் வழக்கம் போல் செயல்பட துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வுஹானில் வழக்கம் போல் மிருக கறிகளை விற்கும் சந்தைகள் செயல்பட துவங்கியுள்ளது. வுஹானின் ஹூனான் சந்தையில் (Huanan Seafood Wholesale Market) மீண்டும் எலி, வௌவ்வால், நாய், பூனை மற்றும் இதர காட்டு உயிரினங்களின் கறி விற்பனை நேற்று மீண்டும் துவங்கியது.
மேலும் படிக்க : கொரோனா : பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியாமல் அமைச்சர் தற்கொலை!
குறிப்பாக வௌவ்வால் கறியின் விற்பனை சூடு பிடிக்க துவங்கியது குறிப்பிடத்தக்கது. மக்கள் தொடர்ந்து வந்து தங்களின் விருப்பமான கறியினை வாங்கிச் செல்வதில் ஆர்வம் காட்டி வருகிறனர். இந்த மிருக கறி சந்தையில் ஜனவரி மாதத்தில் கறி விற்பதற்கு சீன அரசு தடை விதித்திருந்தது. மேலும் காட்டு உயிரினங்களை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யவும் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.