Coronavirus Outbreak German Minister Thomas Schaefer committed suicide : கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவதால் உலக நாடுகளில் உள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, ஸ்பெய்ன், இத்தாலி போன்ற நாடுகளில் இந்த நோய் ருத்ரதாண்டவம் ஆடி வரும் நிலையில் அடுத்து என்ன நிகழுமோ என்ற அச்சத்தில் அனைவரும் உறைந்து போய் இருக்கின்றோம்.
தொழில்கள் எங்கும் நடைபெறாத காரணத்தினால் நிதி நெருக்கடியும் ஏற்பட்டு பல்வேறு இன்னல்களை நாம் சந்தித்து வருகின்றோம். இந்நிலையில் ஜெர்மனியில் ஹெஸ்ஸி மாநிலத்தைச் சேர்ந்த நிதியமைச்சர் தாமஸ் ஸ்கேஃபர் (Thomas Schaefer) இந்த பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மேலும் படிக்க :கொரோனா: சென்னையை ஆபத்தான பகுதியாக அறிவித்த இலங்கை
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக அம்மாநிலத்தின் நிதிஅமைச்சராக இருக்கும் தாமஸின் வயது 54 ஆகும். சில மாதங்களாகவே கொரோனா வைரஸால் ஏற்பட்ட நிதி நெருக்கடியை சமாளிக்க நிறுவனங்களும், தொழில் அதிபர்களும், துறைசார் வல்லுநர்களும் பெரும் போராட்டம் செய்து வருகின்றனர். இந்நிலையில் அதிக மன உளைச்சலுக்கு ஆளான தாமஸ் ரயில்வே தண்டவாளத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரது சடலம் சனிக்கிழமை அன்று கண்டறியப்பட்டது அவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
இக்கட்டான சூழலில் இருந்து மேடேறி வரும் நிலை ஏற்பட்டால் இவர் போன்ற அனுபவம் மிக்க ஒருவரின் உதவி அதிகம் தேவைப்படும். இவரின் தற்கொலை ஜெர்மனியில் பெரும் அதிர்வலையை உருவாக்கியுள்ளது.
மேலும் படிக்க : கொரோனா சிகிச்சை : அமெரிக்காவில் உயில் எழுதும் டாக்டர்களின் எண்ணிக்கை உயர்வு!