/tamil-ie/media/media_files/uploads/2020/02/New-Project-2020-02-24T205151.285.jpg)
Coronavirus outbreak US announces 2.9 million dollars
Coronavirus outbreak US announces 2.9 million dollars : உலக அளவில் அதிக அளவில் கொரோனாவால் தற்போது பாதிக்கப்பட்டிருக்கும் நாடு அமெரிக்கா தான். நாளுக்கு நாள் இங்கு கொரோனாவால் தாக்குதலுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. போதுமான தடுப்பு நடவடிக்கைகளுக்காக சுய ஊரடங்கினை மக்கள் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் அமெரிக்கா, கொரோனா தடுப்புக்காக நிதி உதவியை வழங்கியுள்ளது.
மேலும் படிக்க : வாழ்வின் பெரிய அச்சுறுத்தலை சமாளிப்போம்: மோடி நடவடிக்கைக்கு ஐ.நா ஆதரவு
இந்த நோய் பாதிப்பில் இருந்து மீள 64 நாடுகளுக்கு சுமார் 174 மில்லியன் டாலர்களை உதவியாக அறிவித்துள்ளது அமெரிக்கா. ஏற்கனவே பிப்ரவரி மாதம் 100 மில்லியன் டாலர்களை அறிவித்திருந்த நிலையில் இந்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
இந்தியாவில் ஏற்கனவே சோதனைக்கூடங்கள் மற்றும் நோய் தொற்றினை கண்டறிய போதுமான உதவியை செய்ய இருப்பதாக அறிவித்திருந்தது. இந்நிலையில் அமெரிக்கா இந்தியாவுக்காக 2.9 மில்லியன் டாலர்களை வழங்கியுள்ளது. மேலும் தொழில்நுட்ப ரீதியான உதவிகளையும் செய்ய உள்ளதாக கூறியுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்"
கடந்த 10 ஆண்டுகளில் பொதுச்சுகாதார தேவைகளுக்காக அமெரிக்கா அதிக அளவு உலக நாடுகளுக்கு நிதி உதவி வழங்கியுள்ளது. தற்போது இலங்கைக்கு 1.3 மில்லியன் டாலர்கள், நேபாளத்திற்கு 1.8 மில்லியன் டாலர்களும், வங்க தேசத்திற்கு 3.4 மில்லியன் டாலர்களும், ஆப்கானிற்கு 5 மில்லியன் டாலர்களையும் கொரோனா தடுப்பிற்காக உதவியுள்ளது அமெரிக்கா.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.