/tamil-ie/media/media_files/uploads/2020/03/cats-22.jpg)
Coronavirus outbreak Wuhan restrictions will be lifted on 8th April
Coronavirus outbreak Wuhan restrictions will be lifted on 8th April : உலகம் முழுவதும் கொரொனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்ற நிலையில் உலக நாடுகள் அப்படியே முடங்கியுள்ளது. கொரோனா வைரஸின் பிறப்பிடமான வுஹான் பகுதியில் ஜனவரி மாதத்தின் பிற்பாதியில் இருந்து ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது. வுஹான் அமைந்துள்ள ஹூபேய் மாகாணத்திலும் ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டது.
மேலும் படிக்க : மலை கொரில்லாக்கள் கொரோனாவால் முழுமையாக அழியக்கூடும்!
ஹூபேய் மாகாணத்தில் கொரோனா நோய் தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை குறைய துவங்கியதும், நேற்று அம்மாகாணத்தில் (வுஹான் நீங்கலாக) ஊரடங்கு உத்தரவு திரும்பிப் பெறப்பட்டது.
கடந்த ஒரு வாரத்தில் வெறும் ஒரே ஒரு கொரோனா நோய் தொற்று நோயாளி மட்டும் அனுமதிக்கப்பட்டதால், வுஹான் பகுதியிலும் ஊரடங்கு உத்தரவை திரும்ப பெற முடிவு செய்துள்ளது சீன அரசு. அடுத்த மாதம் 8ம் தேதியில் இருந்து வுஹான், வழக்கம் போல் சுறுசுறுப்புடன் இயங்கும் (ஆனால் partial ஆக மட்டுமே) என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட நாட்கள் ஊரடங்கிற்கு பிறகு உலகை காணும் மக்களை வாழ்த்துவோம். வரவேற்போம்.
மேலும் படிக்க : இங்கிலாந்து இளவரசர் சார்லஸூக்கு கொரோனா! அதிர்ச்சியில் அரச குடும்பம்…
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.