Coronavirus vaccine China claims it invented a vaccine for COVID19 : உலகம் முழுவதும் மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கும் ஒரே நல்ல செய்தி கொரோனா வைரஸிற்கு தடுப்பு மருந்து எப்போது கிடைக்கும் என்பதுதான்.
உலக மக்கள் அனைவரும் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்க, மருத்துவத்துறைக்கு மிகப்பெரிய சவாலாய் அமைந்திருக்கிறது கொரானா வைரஸ். ஏற்கனவே இஸ்ரேல் மற்றும் இத்தாலி நாடுகள் கொரோனா வைரஸிற்கு மருந்து கண்டுபிடித்து விட்டோம் என்று கூறி வந்த நிலையில் தற்போது அதிரடியாக சீனாவும் வைரஸ் தடுப்பு மருந்தினை கண்டுபிடித்துள்ளதாக அறிவித்துள்ளது.
இந்தியா உட்பட பல நாடுகள் உலகம் முழுவதும் வைரஸ்க்கு எதிராக போராடி வருகின்றன. தடுப்பு மருந்துகள் கண்டுபிடிப்பதற்கு மிகப்பெரிய ஆராய்ச்சி நிறுவனங்கள் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றன. இந்நிலையில் கொரோனாவை எதிர்த்து போராடும் தடுப்பூசியை சீனா உருவாக்கியுள்ளது என்று அறிவித்துள்ளது. இந்த மருந்தினை குரங்குகளுக்கு செலுத்தி 3 வாரங்கள் பரிசோதனை மேற்கொண்டுள்ளனர்.
மூன்று வாரங்கள் கழித்து, குரங்களின் நுரையீரலில், கொரோனா நோய் தொற்று இல்லாதது உறுதி செய்யப்பட்டுள்ளது. பிகோவாக் (picovacc) எனப்படும் இம்மருந்தை பீஜிங்கைச் சேர்ந்த சினாவாக் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே சீனாவிடம் இருந்து பெறப்பட்ட ரேபிட் டெஸ்ட் கருவிகள், பி.பி.இ.க்கள் மற்றும் வெண்டிலேட்டர்கள் முறையாக செயல்படாமல் போனது. அதனால் இந்த அறிவிப்பு கொஞ்சம் கலக்கத்தை ஏற்படுத்துவதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.