Coronavirus vaccine: Macaque monkey trial offers hope : கொரோனா வைரஸிற்கு உலக நாடுகள் தடுப்பு மருந்து கண்டுபிடிக்க அதிக தீவிரம் காட்டி வருகிறது. அமெரிக்காவில் பில் கேட்ஸ் அறக்கட்டளை, இஸ்ரேல், இத்தாலி, சீனா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் தாங்கள் நடத்திவரும் தடுப்பூசிக்கான சோதனையில் முக்கிய கட்டங்களில் அடைந்திருப்பதாக தெரிவித்து வருகின்றன.
Advertisment
இந்நிலையில் இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் கொரோனா வைரஸுக்கு உருவாக்கப்பட்ட தடுப்பு மருந்துகளை குரங்குகளுக்கு செலுத்தி பரிசோதனை செய்யப்பட்டது. மனிதர்களின் எதிர்ப்பு சக்தியை ஒத்திருக்கும் குரங்கு வகைகளில் ஒன்றான ரெசூஸ் மக்காக்யூ குரங்களுக்கு இந்த தடுப்பூசி போடப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது
குரங்களுக்கு இந்த சோதனை செய்ததில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து இந்த தடுப்பு மருந்துகள் மனிதர்களுக்கும் செலுத்தப்பட்டன. இதற்கான சோதனை முடிவுகள் அடுத்த மாதத்திற்குள் கிடைத்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தடுப்பூசி சோதனை வெற்றி பெற்றால் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் 45 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை காப்பாற்ற இயலும் என அந்நாடு நம்பிக்கை தெரிவித்திருக்கிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் 10 கோடி நபருக்கு தேவையான மருந்துகளை தயாரிக்க முடிவு செய்துள்ளது இங்கிலாந்து.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
உலக அளவில் இது வரை 100க்கும் மேற்பட்ட கொரோனா தடுப்பூசி உருவாக்கத்திற்கான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் 1000 நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.