Advertisment

'பேய் கொம்பு'டன் சன்ரைஸ் காட்சிகள்: ஈரானில் புதிய திகில்

குண்டு வெடிப்புக்குப் பிறகு ‘ஆல் இஸ் வெல்’ என்று ட்வீட் செய்திருந்தார் அமெரிக்க அதிபர் டெனால்டு ட்ரம்ப்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
devil horn sunrise

devil horn sunrise

Devil horn sunrise: பாரசீக வளைகுடாவில் சூரியோதையத்தின் போது வானத்தில் ஜோடியாக “பேய்க் கொம்புகள்” தோன்றியிருப்பதை கத்தாரில் உள்ள புகைப்பட கலைஞர் படம் எடுத்துருக்கிறார்.

Advertisment

கன்னியாகுமரி எஸ்.ஐ. சுட்டுக் கொலை – குற்றவாளிகளை சிக்க வைத்த வீடியோ

ஜனவரி 3-ம் தேதி, ஈரான் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஈரானின் உயர்மட்ட இராணுவ ஜெனரல் காசெம் சுலைமணி கொல்லப்பட்டார். இதனால் அங்கு பதற்றம் நிலவி வரும் சூழலில், இந்த பேய்க் கொம்பு படம் இன்னும் பதற்றத்தை அதிகரித்துள்ளது. அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் சண்டைகள் முற்றியுள்ள நிலையில், இந்த படம் குறித்த தகவல் வெளியானதும், பல நிபுணர்கள் கவலையில் ஆழ்ந்திருக்கிறார்கள்.

ஈரானில் இருந்து, இர்பில் மற்றும் அல் ஆசாத்தில் உள்ள விமான தளங்களை குறிவைத்து ஒரு டஜன் ஏவுகணைகள் ஏவப்பட்டதாக, பிபிசி தெரிவித்திருந்தது. ஆனால் இந்த தாக்குதலில் எந்த அமெரிக்க ராணுவ வீரர்களோ, பெண்களோ கொல்லப்பட்டதாகவோ, அல்லது காயமடைந்ததாக அறிவிக்கப்படவில்லை. இந்த குண்டு வெடிப்புக்குப் பிறகு ‘ஆல் இஸ் வெல்’ என்று ட்வீட் செய்திருந்தார் அமெரிக்க அதிபர் டெனால்டு ட்ரம்ப்.

”ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்திய நிலையில் எல்லாம் நன்றாக இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தார். தாக்குதலால் ஏற்பட்ட பொருள் மற்றும் உயிர் சேதங்கள் குறித்து ஆராய்ந்து வருவதாகவும், இதுவரை நன்றாகத் தான் செல்வதாகவும் அவர் தெரிவித்தார். அதோடு உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்த , உயர் ரக ஆயுதங்கள் மற்றும் தொழில் நுட்பங்களை கொண்ட ராணுவம் அமெரிக்க ராணுவம் என்றும், இந்த தாக்குதல் தொடர்பாக நாளை அறிக்கை வரும் என்றும்” கடந்த புதன் கிழமை டொனால்ம் டிரம்ப் தெரிவித்திருந்தார்.

அதோடு ஈரானில் இருந்து புதன்கிழமை அதிகாலை புறப்பட்ட உக்ரைன் நாட்டு விமானம், புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானது. இதில் 176 பயணிகள் உயிரிழந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைனின் ஜனாதிபதி, வோலோடிமைர் ஜெலென்ஸ்கி, விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய ஈரானுக்கு ஒரு புலனாய்வாளர் குழுவை அனுப்பப்போவதாக கடந்த புதன் கிழமை கூறியிருந்தார்.

Darbar Review: இது ரஜினி ‘தர்பார்’ – நெகட்டிவிட்டிக்கு நோ என்ட்ரி

மேலும், புதன்கிழமை காலை தென்மேற்கு ஈரானில் அமைந்துள்ள பெரிய அணுமின் நிலையம் அருகே இரண்டு இடங்களில் பூகம்பமும் ஏற்பட்டது. இது அந்நாட்டு மக்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

Iran Us Iraq
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment