Donald Trump suggested to use disinfectant to treat coronavirus lysol warns : கொரோனா வைரஸுக்கு எதிரான போரில் உலக நாடுகள் பல்வேறு முக்கிய நடவடிக்கைகள் ஆராய்ச்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
Advertisment
வியாழக்கிழமை அன்று வெள்ளை மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய டொனால்ட் ட்ரெம்ப், “கொரோனா பரவல் வெயில் மற்றும் உஷ்ணம் போன்ற காரணத்தால் குறைகிறது என ஆராய்ச்சி முடிவுகள் அறிவிக்கின்றன. எனவே அதிக அளவில் அல்ட்ரா வைலட் கதிர்கள் அல்லது மின் விளக்குகள் கொண்டு சிகிச்சை அளிக்கப்படவேண்டும்” என்று கூறியுள்ளார்.
மேலும் உடலுக்குள் இருக்கும் கொரோனா வைரஸ்களை கொல்ல கிருமி நாசினிகளை ஊசி மூலம் உடலுக்குள் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளார். இவரின் இந்த அறிக்கையை கேட்டவுடன் அதிர்ச்சி அடைந்த லைசால் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியுட்டுள்ளது. அதில் எங்களின் தாயரிப்புகள் வெளிப்புற கிருமிகளை அழிக்க மட்டுமே உருவாக்கப்பட்டது. அதை குடிக்கவோ உடலுக்குள் செலுத்தவோ கூடாது என எச்சரிக்கை செய்துள்ளது.
ட்ரெம்பின் இந்த அறிவிப்பை கேட்ட பொதுமக்கள் பலரும் அவசர உதவி மையத்திற்கு போன் செய்து தங்களின் குழப்பங்கள் மற்றும் சந்தேகங்களுக்கு விளக்கம் கேட்டனர். அதிக அளவில் போன் கால்கள் வரவும், மேரிலாண்ட் எமெர்ஜென்ஸி மேனேஜ்மெண்ட் ஏஜென்சி தங்களின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் “எந்த காரணத்தைக் கொண்டும் கிருமிநாசினிகளை உடலுக்குள் ஊசியாகவோ, உணவாகவோ செலுத்தக் கூடாது” என்று மன்றாடிக் கேட்டுக் கொண்டது. நேற்றைய சந்திப்பில் பேசிய டொனல்ட் கிருமி நாசினிகளை பயன்படுத்தவேண்டும் என விளையாட்டிற்கு தான் கூறினேன் என்று கூறி மழுப்பியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil