Advertisment

கறுப்பினத்தவர் மரணம்! அமெரிக்க மக்கள் போராட்டத்துக்கு டிரம்ப் மகள் பகிரங்க ஆதரவு

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Donald Trump's Daughter Tiffany supports protesters Black Man's Killing - கறுப்பினத்தவர் மரணம்! அமெரிக்க மக்கள் போராட்டத்துக்கு டிரம்ப் மகள் பகிரங்க ஆதரவு

Donald Trump's Daughter Tiffany supports protesters Black Man's Killing - கறுப்பினத்தவர் மரணம்! அமெரிக்க மக்கள் போராட்டத்துக்கு டிரம்ப் மகள் பகிரங்க ஆதரவு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் இளைய மகள் டிஃப்பனி, கொல்லப்பட்டதற்கு எதிராக அமெரிக்காவில் நடந்து வரும் போராட்டங்களுக்கு தனது ஆதரவை வழங்கியுள்ளார்.

Advertisment

அமெரிக்காவின் மின்னபோலிஸ் பகுதியில், கள்ள நோட்டு பயன்படுத்தியதாக ஜார்ஜ் பிளாய்ட் என்று 46 வயது கறுப்பின நபர் போலீசால் கைது செய்யப்பட்டார். ஆனால் அவரை விசாரணை என்ற பெயரில் கொடுமை செய்த போலீஸ் ஒருவர், ஜார்ஜை காருக்கு வெளியே தள்ளிவிட்டு கழுத்தில் காலை வைத்து அழுத்தியதில் ஜார்ஜ் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த சம்பவம் வீடியோவாக வெளியாகி அமெரிக்காவை உலுக்கியது.

அமெரிக்காவில் கறுப்பின இளைஞர், போலீசாரால் கொலை செய்யப்பட்ட சம்பவம், அங்கு பூதாகரமாக வெடித்தது. நாட்டின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், போராட்டக்காரர்கள், வெள்ளை மாளிகையை முற்றுகையிட்டனர். கல்வீச்சு சம்பவங்களும் நடைபெற்றன.

மின்னேபோலிஸ் பகுதியில் வெடித்த போராட்டம் நாடு முழுக்க பரவி உள்ளது. வாஷிங்டன் டிசி, நியூயார்க், கலிபோர்னியா, மின்னெசோட்டா ஆகிய பல மாகாணங்களில் போராட்டங்கள் நடந்து வருகிறது. பல லட்சக்கணக்கில் அங்கு கறுப்பின மக்கள் ஆர்ப்பாட்டம் செய்து வருகிறார்கள்.

இந்நிலையில், கலவரங்கள் குறித்து கடந்த திங்கள்கிழமை மாலை பேசிய அதிபர் டிரம்ப், அழிவு மற்றும் தீ விபத்துக்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும், சட்டத்தை மதிக்கும் அமெரிக்கர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் கலவரத்தையும் கொள்ளையையும் நிறுத்த நான் இராணுவத்தை அணி திரட்டுகிறேன். நாட்டின் சட்டம் ஒழுங்கிற்கு நானேதான் பொறுப்பு. மாநில ஆளுநர்கள் அமைதிைய நிலைநாட்டாமல் என்ன செய்கிறீர்கள்?அமைதியைக் கொண்டுவராவிட்டால், அமெரிக்க நகரங்களில் ஆயிரக்கணக்கில் ராணுவத்தை இறக்கிவிடுவேன்” என்று எச்சரித்துள்ளார்.

இந்த பதற்றமான சூழலில், அதிபர் டொனால்ட் டிரம்பின் இளைய மகள் டிஃப்பனி, கொல்லப்பட்டதற்கு எதிராக அமெரிக்காவில் நடந்து வரும் போராட்டங்களுக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

data-instgrm-version="12">

 

View this post on Instagram

 

target="_blank" rel="noopener noreferrer">”Alone we can achieve so little; together we can achieve so much.”- Helen Keller #blackoutTuesday #justiceforgeorgefloyd

A post shared by Tiffany Ariana Trump (@tiffanytrump) on

சமூக ஊடகங்களில் தற்போது #blackoutTTuesday எனும் ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.  இது அமெரிக்காவில் காவல்துறையின் மிருகத்தன அடக்குமுறையும், இனவெறி குறித்த வெளிச்சத்தை பிரகாசிக்க முயற்சிக்கிறது. இந்த டிரெண்டை ஆதரிப்பதற்காக ஒரு கருப்பு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்படுகிறது, அதே போல் கருப்பு படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டரில் பதிவிட்ட 26 வயதான டிரம்ப் இளைய மகள், "தனியாக நாம் மிகக் குறைவாகவே சாதிக்க முடியும்; ஒன்றாக நாம் இவ்வளவு சாதிக்க முடியும்" என்று கேப்ஷனிட்டு ட்வீட் செய்து தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார். தவிர, "#blackoutT Tuesday #justiceforgeorgefloyd என்ற ஹேஷ்டேக்குகளையும் அவர் பதிவிட்டுள்ளார்.

அவரது தாயாரும், டொனால்ட் டிரம்பின் இரண்டாவது மனைவியுமான மார்லா மேப்பிள்ஸ், இதே கருப்பு புகைப்படத்தை பதிவிட்டு, ஆர்ப்பாட்டங்களுக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Donald Trump
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment