Family discovers mirror in their bathroom worth $13,000 belonged to last queen of France : தங்கள் வீட்டு பாத்ரூமில் வைக்கப்பட்டிருந்த கண்ணாடி ஒரு காலத்தில் ஃபிரான்ஸ் நாட்டின் ராணி பயன்படுத்தியிருந்தார் என்ற செய்தி கேட்டு இன்ப அதிர்ச்சியில் உரைந்துள்ளனர் இங்கிலாந்து தம்பதியினர்.
ஃப்ரெஞ்ச் புரட்சிக்கு முன்பு, ஃபிரான்ஸின் கடைசி ராணியாக இருந்தவர் மேரி ஆன்டோனிட்டே((November 2, 1755 – October 16, 1793) . சக்கரவர்த்தி ஃப்ரான்சிஸ் மற்றும் மரியா தெரசாவின் மகளாவார். இவர் பயன்படுத்திய பொருட்கள் அனைத்தையும் மூன்றாம் நெப்போலியனின் மனைவி, பேரரசி எய்ஜூய்ன் தன்னுடைய அரண்மனையில் வைத்திருந்தார். அதில் ஆன்டோனிட்டே தன்னுடைய மாளிகையில் பயன்படுத்திய கண்ணாடிகளும் அடங்கும்.
மேலும் படிக்க : புது வெள்ளை மழை… இங்க இல்லைங்க ஹிமாச்சல்ல!
19ம் நூற்றாண்டின் பிற்பாதியில் அந்த கண்ணாடியில் ஒன்று வால்நட் மரம் கொண்டு ஃப்ரேம் செய்யப்பட்டு, இலைகளையும், கொடிகள் செதுக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டது. 1950ம் ஆண்டு அந்த கண்ணாடியை தற்போதைய உரிமையாளரின் உறவினருக்கு அரண்மனை வழங்கியுள்ளது. அவர் மரணம் அடைந்த பின்னர் 1980ம் ஆண்டுக்கு பிறகு தற்போதைய உரிமையாளரிடம் சேர்க்கப்பட்டது. இந்த கண்ணாடியின் மதிப்பு எதையுமே அறிந்திருக்காத அவர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது கிழக்கு ப்ரிஸ்டோல் ஏல நிறுவனம்.
மேலும் படிக்க : டைட்டானிக் கப்பலை சுற்றிப் பார்க்க ஆசையா? இவ்வளவு பணம் இருந்தால் போதும்!
அந்த ஏல நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில் இந்த கண்ணாடியின் விலை கிட்டத்தட்ட 13 ஆயிரம் அமெரிக்க டாலர்களுக்கு ஏலம் போக வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ளனர். இந்திய மதிப்பில் இதன் விலை 9,73,017 ரூபாயாம்.... தற்போதைய உரிமையாளர்கள் இந்த கண்ணாடியை தங்கள் வீட்டு பாத்ரூமில் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கும் மேலாக வைத்து பயன்படுத்தியுள்ளனர். “இந்த கண்ணாடியின் மதிப்பு இவ்வளவு இருக்கும் என்று நான் ஒரு போதும் நினைக்கவில்லை” என்று அவர்கள் தற்போது கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil