FBI raid at Trump house, monkey pox, srilanka crisis today world news: இன்று உலக நாடுகளில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை இப்போது பார்ப்போம்.
குரங்கு அம்மை தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி
அமெரிக்க சுகாதார கட்டுப்பாட்டாளர்கள் (FDA) குரங்கு அம்மை தடுப்பூசியை வயது வந்தவர்களுக்கு உட்செலுத்துவதற்கு அங்கீகாரம் அளித்துள்ளனர். அதாவது குறைவான அளவு தடுப்பூசியை செலுத்தும் வகையில் தோலின் கீழ் அல்லாமல் தோலின் அடுக்குகளுக்கு இடையில், உட்செலுத்த அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) அறிவித்துள்ளது.
Bavarian Nordic’s Jynneos monkeypox தடுப்பூசிக்கான அவசரகால பயன்பாட்டு அங்கீகாரம், டோஸின் ஒரு பகுதி அதே அளவு பாதுகாப்பை வழங்குவதால் அளிக்கப்பட்டுள்ளது என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையும் படியுங்கள்: பிரான்ஸ் ஆற்றில் மீட்கபட்ட வெள்ளை திமிங்கலம் கருணைக்கொலை
குரங்கு அம்மையை பொது சுகாதார அவசரநிலையாக அமெரிக்கா
ட்ரம்ப் வீட்டில் எஃப்.பி.ஐ சோதனை
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் புளோரிடா இல்லத்தில் FBI அதிகாரிகள் சோதனை நடத்தினர். ட்ரம்பின் Mar-a-Lago தோட்டத்தை அதிகாரிகள் சோதனை செய்தனர், இது ஒரு தனியார் கிளப்பாகும், முன்னாள் ஜனாதிபதி வெள்ளை மாளிகையில் இருந்து இரகசிய பதிவுகளை அவரது புளோரிடா இல்லத்திற்கு எடுத்துச் சென்றாரா என்பது குறித்த கூட்டாட்சி விசாரணையின் ஒரு பகுதியாக, சோதனை நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டது.
சீனாவில் புதிய வைரஸ்
சீனாவில் கொரோனா போன்ற “லங்கையா” என்ற புதிய வைரஸ் உருவாகியுள்ளது. இந்த வைரஸ் விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கு தோன்றியிருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
சீனாவில் உள்ள ஷாண்டங் மற்றும் ஹனன் மகாணத்தில் இந்த வைரசால் 35 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானவர்களுக்கு காய்ச்சல், இருமல், உடல் இளைப்பு, உடல் சோர்வு, குமட்டல் மற்றும் தசைப்பிடிப்பு போன்ற அறிகுறிகள் தென்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
இலங்கையில் பொதுமக்கள் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தம்
இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி காரணமாக அந்நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால், அங்கு போராட்டம் வெடித்தது. இலங்கை அதிபர் மாளிகைக்கு எதிரே காலிமுகத்திடலில் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். போராட்டம் தீவிரமடைந்து அதிபர் மாளிகை முற்றுகையிடப்பட்ட நிலையில், இலங்கை அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே நாட்டை விட்டு தப்பியோடினார். அதனை தொடர்ந்து இலங்கையின் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ரணில் பதவி ஏற்ற மறுநாளே காலிமுகத்திடலில் இருந்த போராட்டக்காரர்கள் கூடாரங்களை போலீசார் அகற்றியதால் மோதல் ஏற்பட்டது. போராட்டக்காரர்கள் கலைந்து செல்ல அதிபர் ரணில் விக்ரமசிங்கே கேட்டுக் கொண்டார்.
இந்த நிலையில் போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதாகவும், கொழும்பு காலிமுகத்திடலில் இருந்து வெளியேறுவதாகவும் போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர். ஆனால் காலிமுகத்திடலில் இருந்து வெளியேறுவதால் போராட்டம் முடிந்து விட்டதாக கருத வேண்டாம் எனவும், இலங்கை அரசுக்கு எதிராக புதிய வடிவில் போராட்டத்தை தொடரப்போவதாகவும் போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil