நானும் தமிழகத்தில் தான் பிறந்தேன்… சுந்தர் பிச்சையை விசாரணை செய்த இந்திய – அமெரிக்க பெண் எம்.பி. பெருமிதம்

வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு வரும் மக்கள் இந்நாட்டிற்கு அளிக்கும் பங்கு மகத்தானது என உருக்கம்…

Google CEO Sundar Pichai and Congresswoman Pramila Jayapal
Google CEO Sundar Pichai and Congresswoman Pramila Jayapal

Google CEO Sundar Pichai and Congresswoman Pramila Jayapal : கூகுள் நிறுவனத்தின் செயல்பாடுகள், அரசியல் கட்சிகளிடம் பாரபட்சம் காட்டுவது, சீனாவில் புதிய சர்ச் இஞ்சின் அறிமுகம் செய்ய இருப்பது, மற்றும் கூகுள் பயனாளர்களின் ரகசிய விவரங்கள் பாதுகாப்பு குறித்து நிறைய குற்றச்சாட்டுகள் அமெரிக்க அரசு முன்வைத்தது.  அமெரிக்க நாடாளுமன்ற விசாரணைக் குழு ஒன்று தங்களுக்கு எழுந்த சந்தேகங்கள் அனைத்தையும் தீர்க்கும் பொருட்டு கேப்பிட்டல் ஹில்லிற்கு பயணமானர் கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை.

மேலும் படிக்க : சீனாவில் கூகுளின் புதிய சர்ச் இஞ்சின் குறித்து சுந்தர் பிச்சையின் பதில்கள்

நாடாளுமன்ற விசாரணைக் குழுவில் இருந்து கேட்கப்பட்ட பல்வேறு விதமான கேள்விகளுக்கு பதில் அளித்தார் சுந்தர் பிச்சை. இதில் அதிசயக்கும் சம்பவம் என்னவென்றால் நாடாளுமன்ற விசாரணைக்குழுவில் தமிழகத்தைச் சேர்ந்த பெண் எம்.பி. ஒருவரும் இடம் பெற்றிருந்தார் என்பது தான்.

Google CEO Sundar Pichai and Congresswoman Pramila Jayapal : ப்ரமிளா ஜெயபால் பெருமிதம்

அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் இருக்கும் 7வது மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிப்பவர் தமிழகத்தைச் சேர்ந்த ப்ரமிளா ஜெயபால். சுந்தர் பிச்சையிடம் கேட்பதற்கு இவரிடமும் கேள்விகள் இருந்தன.

ப்ரமிளா ஜெயபால் தன்னுடைய கேள்விகளை தொட்டங்குவதற்கு முன்பு ”இந்த இடத்தில் நான் பெருமையாக ஒன்றை சொல்லிக் கொள்கின்றேன். நீங்கள் இந்தியாவில் எந்த மாநிலத்தில் பிறந்து வளர்ந்தீர்களோ அதே மாநிலத்தில் தான் நானும் பிறந்தேன். இன்று உலகின் மிக முக்கியமான இருவேறு பொறுப்புகளில் நாம் இருவரும் பதவி வகிக்கின்றோம். வெளிநாடுகளில் இருந்து இந்நாட்டிற்கு வரும் மக்கள் குறித்து பல்வேறு கருத்துகள் நிலவி வருகின்றன. ஆனால் வெளிநாட்டினர் இந்நாட்டிற்கு அளிக்கும் பங்களிப்பு மகத்தானது.

பல்வேறு சந்தேகங்கள் தொடர்பாக இந்த விசாரணை இங்கு நடைபெற்று வருகிறது என்று கூறினார் ப்ரமிளா ஜெயபால்.  ப்ரமிளா ஜெயபால் (53) சென்னையில் பிறந்தவர். அமெரிக்காவில் படிப்பதற்காக மாணவராக அங்கு சென்றவர்.  சுந்தர் பிச்சையும் சென்னையில் பிறந்து ஐ.ஐ.டி காரக்பூரில் படித்துவிட்டு பின்பு 2004ம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இனப்படுகொலை, பாலியல் வன்கொடுமைகள், மற்றும் வெறுப்பினை வெளிப்படுத்தும் விதமான பேச்சுகள் குறித்து தன்னுடைய கேள்விகளையும் சந்தேகங்களையும் விசாரித்தார் ப்ரமிளா ஜெயபால்.

வேலை செய்யும் இடங்களில் பணியாளர்களின் பாதுகாப்பு குறித்தும் கேள்விகள் எழுப்பினார் ப்ரமிளா ஜெயபால்.

Get the latest Tamil news and International news here. You can also read all the International news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Google ceo sundar pichai and congresswoman pramila jayapal were shared proud moment in house judiciary committee

Next Story
ராஜபக்சே பதவியைத் தொடர்ந்தால் சரிசெய்யப்பட இயலாத விளைவுகளை சந்திக்க நேரிடும் – இலங்கை நீதிமன்றம்Mahinda Rajapaksa, ராஜபக்சே, மைத்ரிபாலா சிறிசேனா
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com