சீனாவுடன் தொடர்பில் இல்லாத நாடுகளிலும் பரவும் கொரொனா வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கவலை

சீனாவில் ஹூபெய் மாகாணத்தின் தலைநகர் உகானில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் தோன்றிய கொரோனா என்ற உயிர்க்கொல்லி வைரஸ் அந்த நாட்டில் உள்ள அனைத்து மாகாணங்களிலும் அசுர வேகத்தில் பரவியது.

இந்த கொடிய நோய்க்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்காததால் தினந்தோறும் உயிர்பலிகளை ஏற்படுத்தி வருகிறது. ஒவ்வொரு நாளும் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பதால் பலி எண்ணிகை 2 ஆயிரத்தை தாண்டி உள்ளது.

இந்நிலையில், ஈரானில் கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் இரண்டு பேர் உயிரிழந்ததை தொடர்ந்து உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதனோம் கிப்ரயெசூஸ், வைரஸ் பரவுதலை கட்டுப்படுத்த எடுக்கும் முயற்சிகள் குறித்து கவலை தெரிவித்துள்ளார்.

9 சிறுவர்கள் உயிரை காவு வாங்கிய Coldbest-PC இருமல் மருந்து உற்பத்தி நிறுத்தம்!

ஈரானில் பல நகரங்களில் ஏற்கனவே வைரஸ் தொற்று பாதிப்பு பரவி இருக்கலாம் என்று அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகிறார்கள். இதுவரை ஈரானில் கோவிட்-19 என பெயரிடப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றால் 4 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ரோஸ், சீனாவிற்கு வெளியே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் குறைவாக இருந்தாலும், இந்த வைரஸ் எப்படி பரவுகிறது என்ற விஷயம்தான் கவலையளிக்கிறது என்றார்.

“கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்படவருன் நேரடி தொடர்பு இல்லை. சீனாவிற்கு பயணம் மேற்கொண்ட எந்த ஆதாரமும் இல்லாமல் எப்படி சில நாடுகளுக்கு இத்தொற்று பரவுகிறது என்பது புரியவில்லை. முக்கியமாக ஈரானில் தற்போது அதிகமாகும் உயிரிழப்புகள் மற்றும் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கவலை அளிக்கும் விதமாக இருக்கிறது” என்று டெட்ரோஸ் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே சீனாவை தொடர்ந்து, தென்கொரியாவை கொரோனா வைரஸ் மிரட்டி வருகிறது. சீனாவில் இருந்து 25-க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா பரவியிருந்தாலும் தென்கொரியாவில் அதன் தாக்கம் அதிகமாக உள்ளது.

அந்த நாட்டின் கியோங்சாங் மாகாணத்தின் தலைநகர் தேகுவில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 60 வயது முதியவர் கடந்த புதன்கிழமை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இந்தியாவால் நாங்கள் நன்றாக நடத்தப்படவில்லை; டொனால்ட் டிரம்ப் அதிருப்தி

இதன் காரணமாக அங்கு கொரோனா வைரஸ் பரவல் வேகமெடுக்க தொடங்கி உள்ளது. அந்த வகையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 100 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது.

இதனால் அந்த நாட்டில் கொரோனா தாக்கியவர்களின் எண்ணிக்கை 204 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் ஜப்பானை தொடர்ந்து, சீனாவுக்கு வெளியே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக தென்கொரியா மாறியுள்ளது.

சீனாவில் மட்டும் இதுவரை கொரோனாவால் 2,239 உயிரிழந்துள்ளனர். 75 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்னர்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest International News in Tamil by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close