இமாச்சல பிரதேச மாநிலத்தில் டிஜிட்டல் விஷன் நிறுவனம் Coldbest - PC Syrup என்கிற பெயரில் இருமல் மருந்தை தயாரித்து வந்துள்ளது. இந்த மருந்தைக் குடித்த ஒன்பது சிறுவர்கள் ஜம்மு காஷ்மீரின் உதம்பூரில் கடந்த மாதம் 17ஆம் தேதி உரியிழந்துள்ளனர். மேலும் 17 சிறுவர்கள் பாதிக்கப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து அந்த இருமல் மருந்தை பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தியதில் Diethylene Glycol என்கிற விஷத்தன்மை உள்ள வேதிப்பொருள் கலந்திருப்பது தெரியவந்துள்ளது. இதுதான் உயிரிழப்புக்குக் காரணம் என்பதையும் மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.
"கோல்ட்பெஸ்ட்-பிசி சிரப்பில் விஷம் கலந்த டைத்திலீன் கிளைகோல் இருப்பதால், குழந்தைகள் இறந்து போனதாக பிஜிஐஎம்ஆர் ஆய்வக அதிகாரிகள் எங்களிடம் கூறியுள்ளனர்" என்று சுரிந்தர் மோகன் தெரிவித்துள்ளார். இவர் ஜம்மு காஷ்மீரின் மருந்து மற்றும் உணவு கட்டுப்பாட்டு அமைப்பின் உதவி மருந்து கட்டுப்பாட்டாளராகவும் பணிபுரிகிறார்.
'பிரதமர் மோடி உலகளவில் சிந்தித்து உள்நாட்டில் செயல்படுத்தும் பன்முக மேதை' - நீதிபதி அருண் மிஸ்ரா
ஜம்மு காஷ்மீர் மருந்துக் கட்டுப்பாட்டாளர் லத்திகா கஜூரியா கூறுகையில், பிஜிஐஎம்ஆர் அறிக்கையில் சிரப்பில் டீத்திலீன் கிளைகோல் இருப்பதைக் கண்டறிந்தாலும், பிராந்திய மருந்துகள் பரிசோதனை ஆய்வகத்தின் இறுதி அறிக்கைக்காக நாங்கள் இன்னும் காத்திருக்கிறோம். "அந்த அறிக்கையை நாங்கள் பெற்றவுடன், உண்மையில் மரணங்களுக்கு வழிவகுத்த காரணத்தை கண்டுபிடிப்போம்" என்றார்.
உதம்பூரின் ராம்நகர் தொகுதியில் டிசம்பர் இறுதி முதல் ஜனவரி 17 வரை ஒன்பது மரணங்கள் நிகழ்ந்ததாக ஜம்மு சுகாதார சேவைகள் (டிஎச்எஸ்) இயக்குநர் டாக்டர் ரேணு சர்மா தெரிவித்தார். "நோயாளிகள் கடுமையான சிறுநீரக செயலிழப்புடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்" என்று அவர் கூறினார். "எல்லா மரணங்களிலும் காணப்படும் பொதுவான காரணி அவர்கள் கோல்ட்பெஸ்ட்-பிசி எடுத்ததுதான்" என்கிறார்.
17 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் ஒன்பது பேர் இறந்ததாகவும் டாக்டர் சர்மா கூறினார்.
கோல்ட்பெஸ்ட்-பிசி சிரப்பின் சுமார் 5,500 யூனிட்டுகள் குறைந்தது எட்டு மாநிலங்களில் இருந்து திரும்ப பெறப்படுகின்றன. இமாச்சலப் பிரதேச சுகாதார பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறை அதிகாரிகள் சிரமௌர் மாவட்டத்தில் உள்ள காலா ஆம்ப் பகுதியில் இருக்கும் டிஜிட்டல் விஷன் நிறுவன பிரிவில் அனைத்து வகையான மருந்து உற்பத்தி மற்றும் உருவாக்கத்தை நிறுத்தி வைத்துள்ளனர். அங்கு தான் இந்த மருந்துகள் தயாரிக்கப்பட்டன.
டெல்லி இந்திராகாந்தி ஏர்போர்ட்டுக்குப் போறீங்களா? அப்போ இதெல்லாம் தெரிஞ்சுக்கங்க
இந்நிலையில், தமிழகத்தில் திருச்சி மாவட்டத்தில் இந்த இருமல் மருந்து விற்கப்பட்டுள்ளது தெரிய வந்திருக்கிறது. தடை விதிக்கப்பட்ட இந்த மருந்தின் 5,500 யூனிட் மருந்து இன்னும் திரும்பப் பெறப்பட வேண்டியுள்ளது என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
விஷத்தன்மை கொண்ட இருமல் மருந்து தமிழகத்தில் விற்கப்பட்டுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகளுக்கு இருமல் மருந்து வாங்கும்போதும், விற்கும்போதும் கவனமாக இருக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.