donald trump on india covid cases, trump on china coronavirus cases, கொரோனா வைரஸ், இந்தியாவில் கொரோனா, அமெரிக்காவில் கொரோனா, india china covid cases, india china coronavirus deaths, us covid tests, world news,
இந்தியாவிலும், சீனாவிலும் அதிகமான பரிசோதனைகள் செய்திருந்தால், அமெரிக்காவை விட அங்கு கொரோனா தொற்றுக்கள் அதிகமாகவே இருந்திருக்கும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்
Advertisment
மெய்னில் உள்ள பியூரிட்டன் மெடிக்கல் புராடக்ட்ஸ் நிறுவனத்தில் ட்ரம்ப் பேசுகையில், அமெரிக்காவில் இதுவரை 2 கோடி பேருக்கு டெஸ்ட்கள் செய்துள்ளது. அமெரிக்காவில் கொரோனா தொற்று எண்ணிக்கை 19,65,708 ஆக உள்ளது. பலி எண்ணிக்கை 1,11,390 ஆக உள்ளது. மொத்தம் 19,65,708 கேஸ்களில் 11,15,6,38, பேர்கள் இன்னும் கொரோனா தொற்றுடன் உள்ளனர், 7,38,646 பேர் நோயிலிருந்து குணமடைந்துள்ளனர் என்றார்.
கொரோனா தொற்றில் 6வது இடத்துக்கு முன்னேறிய இந்தியாவில் பலி எண்ணிக்கை 6649 ஆக அதிகரித்துள்ளது. 114073 பேர் குணமடைந்துள்ளனர். 116059 கொரோனா பாதிப்புகள் சிகிச்சையிலோ, வீட்டுத் தன்மையிலோ இருந்து வருகின்றனர்.
Advertisment
Advertisements
இந்தியா இதுவரை 40 லட்சம் டெஸ்ட்களை மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில் ட்ரம்ப், “நாங்கள் 2 கோடிக்கும் அதிகமாக டெஸ்ட்கள் செய்துள்ளோம். இன்னும் டெஸ்ட்கள் அதிகரித்தால் இன்னும் தொற்று எண்ணிக்கை அதிகரிக்கும். நான் ஒவ்வொரு முறையும் கூறுகிறேன், டெஸ்ட்கள் அதிகம் செய்யச் செய்ய பாதிப்பு எண்ணிக்கையும் அதிகமாக இருந்திருக்கும். சீனாவிலும், இந்தியாவிலும் இந்த அளவுக்கு சோதனை செய்தால் அமெரிக்காவை விட அதிக பாதிப்புகள் இருக்கவே செய்யும்.
அமெரிக்காவின் சோதனை விகிதத்தை ஜெர்மனியுடனும் ட்ரம்ப் ஒப்பிட்டார். அவர் நான்கு மில்லியன் மாதிரிகளை பரிசோதித்ததாவும், தென் கொரியா, இதுவரை மூன்று மில்லியன் பரிசோதனை செய்துள்ளதாகவும் கூறினார்.
கொரோனா வைரஸ் எனும் எதிரி சீனாவிலிருந்துதான் பரவியது. அங்கேயே அதை தடுத்திருக்க வேண்டும், அவர்கள் செய்யவில்லை” என்று ட்ரம்ப் சாடினார்.
அவர் மேலும் கூறுகையில், “தடுப்பூசிகளின் தயாரிப்பை விரைவுபடுத்தியுள்ளோம். தடுப்பூசிகள் நம்பமுடியாத அளவிற்கு வந்து கொண்டிருக்கின்றன, நீங்கள் பார்க்கும் வரை காத்திருங்கள். மருந்துகள் தயாரிக்க பியூரிட்டன் போன்ற மிகச் சிறந்த தனியார் துறை தலைவர்களுடன் நாங்கள் கூட்டு சேர்ந்தோம். எனது நிர்வாகம் 1.5 பில்லியனுக்கும் அதிகமான தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கு வழங்கியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil