காபூலில் உள்ள தாஷ்ட்-இ-பார்ச்சி பகுதியில் கல்வி நிறுவனம் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் மற்றும் டஜன் கணக்கானோர் காயமடைந்தனர்.
காஜ் கல்வி மையத்தில் வெள்ளிக்கிழமையன்று நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் பலியானவர்களில் பெரும்பாலானோர் மாணவிகள் என காபூலில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படியுங்கள்: உக்ரைன் பகுதிகளை இணைக்கும் ரஷ்யா பிரகடனத்திற்கு எதிராக ஐ.நா தீர்மானம்; வாக்கெடுப்பை புறக்கணித்த இந்தியா
"காபூலின் தாஷ்ட்-இ-பார்ச்சியில் உள்ள காஜ் கல்வி மையத்தில் நேற்று நடந்த பயங்கரவாதத் தாக்குதலால் நாங்கள் வருத்தமடைகிறோம், மேலும் பலியானவர்களின் குடும்பங்களுக்கு எங்கள் இரங்கலைத் தெரிவிக்கிறோம்" என்று இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி ட்வீட் செய்துள்ளார்.
மேலும், "கல்வி கற்பிக்கும் இடங்களில் அப்பாவி மாணவர்கள் தொடர்ந்து குறிவைக்கப்படுவதை இந்தியா வன்மையாகக் கண்டிக்கிறது," என்றும் அரிந்தம் பாக்சி கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil