Indian-American Couple Develops Low-Cost Ventilator For Coronavirus Patients : பிஹாரின் பாட்னாவில் பிறந்தவர் தேவேஷ் ரஞ்சன். அவர் திருச்சியில் இருக்கும் ஆர். இ.சி. கல்லூரியில் பட்டம் பெற்று அமெரிக்காவில் உள்ள ஜார்ஜியா டெக்கில் வேலை பார்த்து வருகிறார். அவருடைய மனைவி குமுதா ரஞ்சனும் அட்லாண்டாவில் மருத்துவராக பணியாற்றுகிறார்.
இவர்கள் இருவரும் தற்போது கொரோனா சிகிச்சைக்கு தேவையான மிக முக்கிய கருவியான வெண்டிலேட்டர்களை தயாரித்து வருகின்றனர். அதுவும் மிக குறைந்த விலையில். எப்படி பார்த்தாலும் 100 டாலர்கள் மட்டுமே இதனை உருவாக்க செலவாகும். தயாரிப்பாளர்கள் லாபத்திற்காக 500 டாலருக்கு விற்பனை செய்தாலும் கூட, தற்போது அமெரிக்காவில் இருக்கும் நிறைய நபர்களின் உயிர்களை காப்பாற்ற இயலும். அமெரிக்காவில் ஒரு வெண்டிலேட்டரின் விலை 10 ஆயிரம் டாலர்கள் ஆகும்.
இந்த வெண்டிலேட்டர்கள், ஐ.சி.யுவில் இருக்கும் வெண்டிலேட்டர்கள் போல் அதிக தொழில்நுட்ப உதவியுடன் உருவாக்கப்படவில்லை. மாறாக எலெக்ட்ரானிக் சென்சார்கள், கம்ப்யூட்டர் கண்ட்ரோல் மேனேஜ் கீ ஆகியவை உதவியுடன் உருவாக்கியுள்ளனர். இந்த வெண்டிலேட்டர்கள் உருவாகத்திற்கு வந்தால், இந்தியா, ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் இதனை ஏரளாமாக பயன்படுத்த முடியும் என்றும் இந்தியாவே இதனை தயாரித்து உலக நாடுகளுக்கு விற்பனை செய்ய முடியும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். இந்த வெண்டிலேட்டர்களை உருவாக்க வெறும் மூன்று வாரங்களே எடுத்துக் கொண்டனர் இந்த தம்பதியினர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“