Indian defence attaché now has unescorted access to Pentagon, says US Air Force Secretary: பென்டகனுக்குள் இந்தியப் பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு இப்போது மெய்க்காவலர்கள் துணையின்றி செல்லும் அணுகல் உள்ளது என அமெரிக்க பாதுகாப்புத் துறையின் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
திங்கட்கிழமை சுதந்திர தினத்தன்று இந்தியா ஹவுஸில் அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரன்ஜித் சிங் சந்து வழங்கிய வரவேற்பு நிகழ்ச்சியில் அமெரிக்க விமானப்படை செயலாளர் ஃபிராங்க் கெண்டல், இந்தியாவுடன் நாங்கள் பகிர்ந்து கொள்ளும் நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்போடு இத்தகைய நடவடிக்கை இணைந்துள்ளது என்று கூறினார்.
இதையும் படியுங்கள்: ஆப்கானிஸ்தானில் ஓராண்டு நிறைவைக் கொண்டாடிய தாலிபான்கள்; பெண்கள் பங்கேற்பு இல்லை
“இன்றைய நிலவரப்படி, இந்திய (பாதுகாப்பு) அதிகாரிகள் குழு இப்போது பென்டகனில் மெய்காவலர் துணையற்ற அணுகலைக் கொண்டுள்ளது, இது இந்தியாவின் முக்கிய பாதுகாப்பு நட்பு நாடு என்ற அந்தஸ்துடன் எங்கள் நெருங்கிய உறவின் தொடக்கமாகும்” என்று கெண்டல் கூறினார்.
“பென்டகனுக்கான மெய்க்காவலர் துணையற்ற அணுகல் ஒரு பெரிய விஷயம் என்று நீங்கள் நினைக்கவில்லை என்றால், நான் கூட ஒரு மெய்காவலர் துணை இல்லாமல் பென்டகனுக்குள் செல்ல முடியாது,” என்று அவர் கூறினார்.
அமெரிக்க பாதுகாப்புத் துறையின் தலைமையகமான பென்டகன், அணுகலைப் பெறுவதற்கு மிகவும் கடினமான இடங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. அமெரிக்க குடிமக்கள் கூட உயர்மட்ட பாதுகாப்பு அனுமதி இல்லாமல் பென்டகனுக்குள் அணுக முடியாது.
ஒபாமா நிர்வாகத்தின் போது இந்தியப் பிரச்சினைகளில் பணியாற்றிய கெண்டல், தேசிய பாதுகாப்புப் பகுதியில் பிணைப்புகளை வலுப்படுத்த வேண்டும் என்று விரும்புவதாகக் கூறினார்.
“வேறு எந்த நாட்டையும் விட அதிக கூட்டுப் பயிற்சிகளை மேற்கொள்ளும் நாடு இந்தியா என்பதும், நீண்ட நெருக்கமான உறவைக் கொண்டிருப்பதோடு, பிராந்தியத்திலும் உலகெங்கிலும் ஒருங்கிணைந்த பாதுகாப்புக்காக நாங்கள் ஒன்றிணைந்து செயல்படுவதால், பல ஆண்டுகளாக உறவைக் கட்டியெழுப்பவும் பலப்படுத்தவும் முடிந்தது,” என்று அவர் கூறினார்.
பாதுகாப்பு வர்த்தகம் மற்றும் தொழில்நுட்ப முன்முயற்சி, பல ஆண்டுகளாக வளர்ந்து இன்றுவரை தொடர்கிறது என்றும் அவர் கூறினார்.
“நாங்கள் சமீபத்தில் ஒரு வருடத்திற்கு முன்பு ஆளில்லா வான்வழி வாகனங்களுக்கான புதிய கூட்டுறவு திட்டத்தை தொடங்கினோம். எங்களால் தொழில்நுட்பத்தைப் பகிரவும், எத்தனையோ திட்டங்களில் ஒன்றாகச் செயல்படவும் முடிந்தது. எனவே இது ஒரு குறிப்பிடத்தக்க பயணமாகும், இது தொடரும் என்று எனக்குத் தெரியும், ”என்று கெண்டல் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil